பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 த. கோவேந்தன்

வழங்கும் உயிர் ஒலிகளை இந்த அடிப்படை உயிர் ஒலியின் வேறுபாடுகளாக விளக்குவர் தமிழில் வரும் ஊகாரம் இந்த அடிப்படை ஊகார ஒலியே போன்றது எனலாம் சிறிது பிறழினும் வகர ஒலி தோன்றும் இதழ்கள் மிக அண்மிக் குவிந்த நிலையில் இவ்வொலி (Labio-dental v) வேறாக, இரண்டிதழ்களின் இடையே பிறக்கும் வகரத்தோடு (Bi-labial V) ஊது>வூது என இது சிலபோது ஒலிக்கும் என்பர் வீடு> வூடு என இதழ் எழுத்துக்களின் சார்பால் ஈ, ஊ ஆதலும் உண்டு யூகி> ஊகி; வியூகம்> ஊகம்; ஹஇணன்> ஊணன் என யூ, வியூ ஹஅ என்பவை தமிழில் ஊ என வரும் ஸஅசி> ஊசி எனவரும் என்றால், ஸ்இ என்பதும் பூரீ என, வரும் எனலாம்; இவ்விடங்களில் வடசொற்களில் முதலில் வரும் மெய்யெழுத்துக்கள் கெட்டன என்று கொள்வதே சிறப்பாம் உதீசி> ஊசி என இடைக்குறையாக வரும் போது முதல் நிறை உகரம் ஒலியளவைச் சமன்படுத்த ஊ என நீளும் என்பதும்> என்பது உம், வழு> வழுஉ என்று அளபெடுத்து உகரம் ஊகாரமாகும் வழு என்பதே பழைய வடிவம் போலும் உன்மத்தம், ஊமத்தம் என உகரம் ஊகாரமாய் நீண்டு ஒலி நிரப்பும் உதாரன்> ஊதாரி (வீண் செலவாளி) என இழிவுப்பொருளில் வரும்போது உகரத்தின் மாற்றொலியாய் ஊகாரம் வரும்

ஊ என்பது கைக்கிளை என்ற இசைச் சுரத்தின் எழுத்தாகும்

ஊ என்பது இறைச்சி என்று பொருள் தரும் ஊக்கு, ஊசல் முதலிய சொற்களில் ஊ நீங்கலாக மற்றைய வற்றைச் சொல்லாக்க விகுதி எனத் தள்ளிக் கழித்தால், அப்பால்செல் என்ற பொருளில் வரும் ஊ என்ற பகுதியே எஞ்சி நிற்கும்

புகு>புகூஉ எனப் பகுதியின் ஈற்றினை நீட்டிச் சொல் வதாலேயே இறந்தகால வினையெச்சம் பிறந்த நிலையில் செய்யூ என்ற வாய்பாட்டு வினையெச்சத்தின் விகுதியாக ஊ-அமைகிறது