பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 65

விளிக்குறிப்பு, இகழ்ச்சிக் குறிப்பு, இரக்கக் குறிப்பு என்ற பொருள்களில் நாளடைவிலும் ஏ வழங்வொக் காண் கிறோம். உழை என்ற சுரத்தின் அடையாள எழுததாக ஏ என்பது அமைகிறது.

வடிவம் ( பார்க்க: எ) : வட்டெழுத்தில் பிற்காலத்தில் © என்ற வடிவத்தில் ஏகாரம் எழுதப்பெறக் காண்கிறோம்

இது தமிழ் நெடுங்கணக்கில் ஒன்பதாம் எழுத்து; உயிர் இஃது அகரம்முன்னும் இகரம் பின்னு மாக ஒற்றித்து ஒலிக்கின்ற ஈருயிர் ஓரொலி எழுத்தாம் (சந்தியக் கரம், கூட்டொலி - Diphth ong) முற் கூறு எடுத்தொலிக்கப்படுதலின் இது வீழிசைக் கூட்டொலி யாம் இவ்வாறு வருதலை நலிந்து வருதல் என்பர். இது நெட்டெழுத்தென்று கொள்ளப்படும் இதற்கு இனம் இதனிற்றில் அமைந்த இகரமேயாம் ஆதலின் ஐகாரம் அளபெடுக்கும்போது, அளபெடுத்தற்கு அறிகுறியாக இகரமே இடப்படும் அகரம் முன்னொலித்தலின் ஐகாரத் தோடு அகரம் மோனையாகும் ஒரெழுத்தொரு மொழி யிலோ, மொழி முதலிலோ அன்றி, மற்றைய இடங்களில் 'அய்' எனக் குற்றெழுத்தாகவே இஃது ஒலித்தலின் ஐகாரக் குறுக்கம் என அவ்விடங்களில் பெயர் பெறும் ஐயர் என்பதை அய்யர் என எழுதுதலும் உண்டு தோன்றல் என்பது ஈற்றயல் நீண்டு தோன்றால் என விளி ஏற்கும் . ஆகையால் கிள்ளை என்பது என விளி ஏற்றலின் ஈற்றயல் நீளாத இயற்கை நிலையில் கிள்ளப் என்றே இருத்தல் வேண்டும் என்பது தெளிவு எனவே ஐ-அய் என்று முடியும். மொழியின் ஈற்றில் வரும் யகரமும்