பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 த. கோவேந்தன்

சிலபோது இகரமாகப் பழங்காலத்திலும் எழுதப் பெற்றது என அறிகிறோம்; நாய்=நாஇ இறந்தகால வினையெச்ச விகுதியாக வரும் இகரம் போ+இ=போய் என யகரமாக நிற்பதனையும் காண்கிறோம் அந்த யகரம் இகர உயிர்போல் ஒலித்து அகரத்தின் பின் வரும்போது ஈருயிர் ஒலியான ஐ போல் ஆகும் சின’ என்ற பகுதி சினை இ என வருதலின் அகர இகரம் ஐகாரமாதல் காண்க ஐந்தே என்பது "அயிந்தே எனக் கூரம் செப்பேட்டில் 7ஆம் நூற்றாண்டில் பொறிக்கப் பட்டுள்ளன இடையில் எவ்வாறாயினும் மொழி முதலில் முற்ற முடிய ஈருயிரும் இணைந்த ஒரொலி யாகவே, ஐ என்பது தெள்ளத் தெளிய ஒலிக்கின்றது ஆதலின் ஒள என்பதனைப்போல ஐ என்பதனைத் தமிழ் நெடுங்கணக்கில் புறக்கணிக்க முடியாது

நடை=நடெய்=நடெ என ஒலிக்கப்பெறுதலின் தமிழில் வரும் ஐ என்பது எகரமும் இகரம்போல் ஒலிக்கும் யகரமும் இயைந்த ஈருயிர் ஒரொலி என்பர் கால்டுவெல். 'கை' என்ற தமிழ்ச்சொல், தெலுங்கில் 'செய்’ என வரும் செய் என்ற வினைப்பகுதி இங்கு விளங்கித் தோன்றலின் செய்வதற்குதவும் உறுப்புக் கை யெனப் பெயர்பெறும் என்பதாயிற்று கெய்' என்பது கன்னடம் இவை கால்டுவெல் கூற்றினை வற்புறுத் தினாலும், ஐ என்பது திராவிட மொழிகளில் சிறப்பிடம் பெற்றிருப்பதனை அம்மொழிப் பாக்கள் நிலை நாட்டுகின்றன தலை என்பது பேச்சு வழக்கில் 'தலே' என்றும், தெலுங்கில் "தல" என்றும் வருவதால் ஐகாரம் எ என்றும் அ என்றும் மாறக் காண்கிறோம் ஐ என்பதில் வரும் அகரம் ஒருசில இடங்களில் a என்பதாகவும், ஒருசில இடங்களில் a e என்று முன் நாம் காட்டிய தாகவும் (பார்க்க : அ) முன்னர் அமைந்திருத்தலால் அஎ என்ற இந்த மயக்கம் எழுந்ததெனலாம்

ஐந்து என்பது ஐ எனக் குறுகி வரலாம். பனை+காய்