பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 71

அமையும் அழைத்தற் குறிப்பாகவும், அசைநிலை யாகவும் ஒகாரம் வரும் ஒச்சு ஓங்கு முதலியவற்றில் ஒ என்பது உயர் வினைக் குறிக்கின்றதுபோலும் ஐ என்பது ஒ என நீண்டு ஒத்திருக்கை நிலையைக் குறிப்பதாகி, ஒவு, ஒவியம் என்றெல்லாம் பல்கி வரக்காண்கிறோம்

இது விளரி என்ற சுரத்தின் குறியீடாகும்

வடிவம் : பார்க்க ஒ

இது தமிழ் நெடுங்கணக்கில் பன்னி ரண்டாம் எழுத்து; தனித்தமிழ்சொற்களில் மொழிக்கு முதலில் மட்டுமே வரும்நட்டெழுத்தென்று கருதப்பட்டாலும், 'அவ்' எனக் குற்றெழுத்தைப்போல் ஒலித்து, ஒளகாரக் குறுக்கம் எனப் பெயர் பெறும் இது அகரமும் உகரமும் சேர்ந்ததொரு கூட்டெழுத்தாகும். வகரக்கூறும் உண் டென்பர் சிவஞான முனிவர். அகர வகர ஒலியினையே ஒள என்ற கூட்டொலியாகத் தொல்காப்பியர் காலத்தி லேயே கொண்டனரெனலாம். ஒள என ஒலிக்கும்போது பல்லோடு இதழ் சேர்வதால் பிறக்கும் வகரம் (V) தோன்றக் காண்கிறோம். வகரம் இவ்வாறு வழங்கியதாலேயே 'அவ்' என்பதனை 'ஒள' எனக்கொள்ளலாயினரெனலாம். தமிழில் வந்து வழங்கும் வடமொழிச் சொற்களில் ஒள என்பது மொழியின் இடையிலும் கடையிலும் வரும் ஒள என்பது ஒளவை என்பதில் காணப்படும் ஒள என்பது பெண்பாலைக் குறிப்பதாக முன்னிலையில் பெண்பால் விகுதியாகப் பழங்கன்னடத்தில் வழங்கக் காண்கிறோம். தமிழில் இது முற்றத் தோன்றாதென்