பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 73

இருத்தல் வேண்டும் வல்லெழுத்து மிக்குவரும் பாட் டோசை நயத்தை வல்லிசை வண்ணம் என்றும் (தொல், பொரு528), மெல்லெழுத்து மிக்குவரும் பாட்டோசை நயத்தை மெல்லிசை வண்ணம் என்றும் (தொல், பொரு. 529) வழங்கும் தொல்காப்பியர் வழக்கினை, ஆய்த எழுத்து மிக்கு வரும் பாட்டோசை நயத்தை நலிபு வண்ணம் என்று வழங்கும் அவர் வழக்கோடு (தொல், பொரு 535) ஒப்பு நோக்கும்போது நலிபு’ என்பது ஆய்தம் என்ற சொல்லின் பொருளாக அமைவது தெளிவாகும் ஒய்தல் ஆய்தல்.உள்ளதன் துணுக்கம்’ (தொல் சொல். 330) என்ற சூத்திரம் ஆய்தம் என்பதற்கு உள்ளது நுணுகி நலிதல்’ என்று பொருள் கொள்ள வழியும் காட்டுகிறது

'ஆய்தமூ மொற்றெனப் பெற்றசை யாக்குமென் றோதி னாருள ராகவு மொண்டமிழ் நாத ராயவர் நாநலி போசையிற் கேது வென்றெடுத் தோதினா ரென்பவே'

(யாப்பருங்கல விருத்தி, சூ 3 உரை) அக்கடிய-அஃகடிய கற்றீது-கஃறீது முட்டீது முஃடீது என வருவனவற்றில் முன்னைய வடிவங்கள் வலித்த வடிவங்களும், பின்னையவை நலிந்த வடிவங் களும் ஆதலைக் காணலாம் வலித்த வடிவங்கள் பின் னாளைய வடிவங்கள் அவ்வாறானால் எவ் வெழுத்தின் நலிபாக ஆய்தம் பண்டை நாளில் வழங்கியது என்ற கேள்வி எழும் எஃகு என்ற சொல் இன்று ஒலிக்கப் பெறுவதனை நோக்கினால் பொதுவாக உயிர்ப் பெழுத்தாகவும் (Breathed letter) வெடி எழுத்தாகவும் (Plosive) ஒலிக்கப் பெறும் ககர மெய், ஆய்தத்தின் பின் வெடி எழுத்தாக அன்றி உரசு எழுத்தாக (Fricative) ஒலிக்கப் பெறுதல் விளங்கும் இவ்வாறு வெடி எழுத்து உரசு எழுத்தாக நலிவதே ஆய்த எழுத்து அங்கு வந்ததனைக்