பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 75

தாகியது அஃது+காண் என வெடி எழுத்துப் பின்னே வருமானால் தகரம் வெடி எழுத்தாக இருக்கும் நிலையில் மாறாமல் உறுதிபெற்று, அதுகாண் என்றே ஒலிக்கப் பெறும் (தொல் எழுத் 423, 424) :ப என்ற உபத் மானியத்தின் வடமொழி ஒலி போன்றதாகும் ஆய்த பகரத்தின் ஒலி விளக்கை ஊதும்போது இதழிடை எழும் ஒலியே இந்த ஒலியாகும் கஃபு என்று ஒலித்துக் காண்க சுஃஃறு என மேலே ஆய்தத்தினை இரட்டித்து எழுதிக் காட்டினோம். ஷ என்ற ஒலி தொடர்ந்து எழுதுவதனைச் சுட்ட அவ்வுாறு எழுதிய காலம் உண்டு ஆய்தத்திற்கு எனத் தனியொலி இல்லாதபோது இவ்வாறு எழுதுவது தவறு. ஆதலின், இவ்வாறு எழுதலாகாது எனத் தொல்காப்பியர் கூறுவதாக இளம் பூரணர் விளக்குகின்றார். ஆனால், நச்சினார்க்கினியர் காலத்திற்குள் இவ்வாறு எழுதுவது பெருவழக்காய் விட்டமையால், அவ்வாறு எழுத வேண்டும் என அவர் பொருள் கூறலாயினர் (தொல் எழுத் 40 தொல்காப்பியர் ஆய்தத்தினைத் தனி ஒலியாகக் கொள்ளவில்லை என்பது மற்றோர் இடத்தும் விளங்குகிறது. அவர், அஃது முதலிய சொற்களைச் சுட்டு முதலாகிய ஆய்த இறுதி' (தொல், எழுத் 200) என்று வழங்குகிறார். இதன் உட் பொருள் அறியாது, தொல்காப்பியரை எள்ளி நகை யாடிய புலவர்களும் உண்டு. ஆய்த இறுதி என்று தொல்காப்பியர் கூறுவதால் ஃது என்ற இரண்டு அறி குறிகளும் உரசு ஒலியாம் ஒரெழுத்தினையே சுட்டு கின்றன என்பது தெளிவு. * 女

பிற சார்பெழுத்துக்கள்போல இந்த ஆய்தமும் தனி மொழியிலும் தொடர் மொழியிலும் வரும் எனத் தொல்காப்பியர் கூறுகின்றார் (எழுத் 38, 39). முள்+தீது =முஃடீது, பல்+தீது=பஃறீது என ளகர லகரங்களின் பின் தகரம் வரும்போது, தகரம் டகர றகரமாக முறையே திரிய, ளகர லகரங்கள் ஆய்தமாகக் காண்கிறோம். இந்த ஆய்தத்