பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 த. கோவேந்தன்

தினை ஆய்தக் குறுக்கம் எனப் பின் வந்தோர் வழங்கினர் சுட்டெழுத்தின் பின்வரும் வகரம், பன்மைப்பொருளில் அவ் எனவரும்; இதன்பின் வலிவரின், உயிர்ப்பெழுத்தின் சாயல் பெற்று வகரம் ஒலிப்பு நீங்கி உயிர்ப்பாக நின்று ஆய்தமாகிப் பின்வரும வல்லெழுத்தினை உரசெழுத் தாக்கிவிடும் அவ்+கடிய =அஃகடிய எனக் காண்க இங் கெல்லாம் குற்றெழுத்தின் பின்னரே இந்த மாறுதல்க்ள் எழுகின்றன; நெட்டு எழுத்தாயின் நீட்டியும் எடுத்தும் ஒதப்பெறுதலால் இத்தகைய மாறுதல் நெட்டெழுத்தின் பின் எழுவது இல்லை; இதனாலேயே குற்றெழுத்தின் பின்னரே எங்கும் ஆய்தம் வரக் காண்கிறோம். வல்லெழுத்தினையே உரசெழுத்தாக மாற்றிவருதலின் ஆய்தம் எப்பொழுதும் வல்லெழுத்தின் முன்னரே வரவும் காண்கிறோம்

குறியதன் முன்ன ராய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்த வல்லாறன் மீசைத்தே. (தொல். எழுத். 38) என்று தொல்காப்பியர் கூறுவது இவ்வாறு தெளிவாகிறது

தொல்காப்பியர் சுட்டெழுத்தின் பின் வகரம் ஆய்த மாக மாறுவது மட்டுமே கூறியுள்ளார் (தொல் எழுத் 379) பிற இடங்களிலும் ஆய்தம் திரிபுப் புணர்ச்சியாக வந்தமையை அவர் நாளிலேயே மக்கள் மறந்தனர் போலும் ஆய்தம் வரும் பல தனிச்சொற்களை ஆராய்ந் தால், அங்கெல்லாம் வகரம் ஆய்தமாகி மாறி நிற்கக் காண் போம் வெஃகா=வெவ்+கா (விரும்பத்தக்க சோலை “வெம்மை வேண்டல்”) கஃபு=கவ்+பு (கவை-கப்பு) கஃகு =கள்)+டு (கவடு) அஃதை=அவ்+தை (அத்தை?) பஃது= பவ்+து (பரந்தது பெரிது, பெரிய எண்) இங்கெல்லா குற்றெழுத்தின் பின் எடுத்து ஒலிக்கப் பெறாத வகரம் அடுத்துவரும் வல்லெழுத்தின் சார்பால் ஒலி எழுத்து (voiced letter) நிலையின் நீங்கி வெற்று உயிர்ப்பாக மாற, அடுத்து வரும் வல்லெழுத்தும் அவ்வுயிர்ப்பின் சார்பால்