பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 77

உரசெழுத்தாக மாறுவ தனைக் காண்கின்றோம் வகரம்போல லகர னகரமும் வல்வெழுத்தின் சார்பால் ஒலி எழுத்தாம் நிலையை இழப்பதுண்டு உயிர் பெழுத்தாம் லகரம் வெல்ஷ் மொழியில் Lloyd முதலிய சொற்களில் வரக் காண் கிறோம் இதனை மலையாள மொழியில் பல்ப்பல என வல்லொற்றோடு இணைத்து எழுதக் காண்கிறோம் உயிர்ப்பொலியாக மாறிய லகரம் றகரம் போன்றது எனக் கொண்டு, தமிழர் பற்பல என எழுதுவர் உயிர்ப்பொலியாக நிற்கும் லகர, ளகரம் எடுத்தோதல் பெறா நிலையில் வெறும் உயிர்ப்பாய்ப் பின் வரும் வல் லெழுத்தை உரசு எழுத்தாக மாற்றுவதும் பழையவழக்கு, முஃடீது, கஃறீது எனக் காணவில்லையா? இவ்வாறு தொல்காப்பியர் காலத்திலும், பழைய வழக்காய் வழங்கிய ஆய்தம் கால்டுவெல் அவர்கள் கூறுவது போன்று ‘கட பட என்று உருட்டுவோரின் கற்பனை ஆதல் இல்லை

ஆய்தத்தினைத் தனி எழுத்தாக எழுதும் வழக்கத் தினைத் தொல்காப்பியர் மறுப்பதால் அவ்வழக்கம் அவர் காலத்திலேயே இருந்ததென்று அறியலாம் அதனை மெய் என்றே கொண்டு புள்ளி, ஒற்று எனத் தமிழர் வழங்கினர் (அவிநயம்-யாப்பருங் கலவிருத்தி, பக் 28). காலப்போக்கில் அஃது என்பது அஹ்து என்ற ஒலியோடு மெய்போலவும், அகுது என்ற ஒலியோடு உயிமெய் போலவும் இசைக்கப் பெற்றது; முதல் வகையில் மெய்போல அலகு பெறாதும், இரண்டாம் வகையில் உயிர்போல அலகு பெற்றும் வரததொடங்கியது 'தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்’ என்ற குறளில் ஆய்தம் மெய் போலவும், ஆற்றால் அளவறிந் துண்க ஆஃதுடம்பு’ என்ற குறளில் உயிர்போலவும் அலகுநிலை பெறுதல் காண்க. விரித்தல் விகாரமாயும் ஆய்தம் வந்தது. அழகு=அழஃகு (யாழ்முரி 5) உயிர்ப்பிசையாம் வ்ெடி எழுத்துக்கள் நாளடைவில் தம்