பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

வாழ்கிறது; அம்மொழிபேசும் மக்களும் அதனுடேய வாழ்ந்து சிறப்பு பெறுகிறார்கள். இது தமிழுக்கும் தமிழனுக்கும் உள்ள சிறப்பு.

பிறிதொரு மொழியை தழுவி, அரவணைத்து, சிறப்பு பெறச் செய்தல் என்பது தமிழ்மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் உள்ள பரந்துபட்ட அறிவின்பால் உண்டானது.

எழுத்துகள் வளர்ந்தாலும், வளராவிட்டாலும், மாறினாளும், மாறாவிட்டாலும் ஒலிகள் வளர்ந்து வளர்ந்து பெருகிவருகின்றன. ஆனால், அவைகள் எல்லாவற்றையும் தனித்தனியே குறிப்பதற்கு போதுமான அடையாள எழுத்துகள் இருப்பதில்லை. உலகத்தில் உள்ள பேச்சு மொழிகள் வளரும் . மொழிகள் இனிவளரும் மொழிகள் அனைத்திலும் இப்படிப்பட்ட நிலைமை உண்டு. எழுத்துமுறை என்பது மொழிக்கு ஒரு கருவியே. அது குறையற்றுக் காணப்படவேண்டும்; அது மூலமே படைப்புலகம் சிறப்பு பெற்று திகழவேண்டும்; திகழும்.

இன்றைய நவீன அறிவியல் தொழில் நுட்ப உலகில் மனிதர்களின் தொடர்புகள் மிக நெருக்கமாகி வருகின்ற நேரத்தில் தாய்மொழியைத் தவிர, இன்னுமொரு மொழி கற்றுக் கொள்ளவேண்டியதும்; நேசிக்க வேண்டியதும் இன்றியமை தேவையாகிவிட்டது.

எப்படி பிறதொரு மனிதனை, இனம், சாதி, மதம், வர்க்கம் பாராமல் அன்பு கொள்கிறோமோ அப்படியே பிற மொழிகளின் பாலும் அன்பு பாராட்டி கற்று அதனின் சிறப்பை நம் மொழிக்குத் தருவதும்; நம்மொழியின் படைப்பை பிறிதொரு படைப்பதும், மொழியில் படைப்புலகுக்கு தருவதும் மொழியின் வளர்ச்சியே தவிர வீழ்ச்சி அல்ல என்பதை உணரவேண்டும்.

ஒரே மொழியை சிறப்பாகவும், கொச்சையாகவும் (வட்டார மொழி) பேசும் மக்கள் சமுதாயத்தில் மேல் நிலை; கீழ்நிலை என்று பாகுபாட்டால் பிரிக்கப்பட்டுள்ளனர். என்பது உண்மையை தவிர வேறில்லை. இதனைத்தான் அறிஞர் பெர்னாட்ஷா “மொழித் தடுப்புகள் உள்ளவரை சமதாய தடுப்புகளும் இருந்தே தீரும்” என எச்சரித்தார்.