பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 த. கோவேந்தன்

முன்வரும் உயிர், மெலி முதலிய ஒலிப்பசையாம் வெடி எழுத்துக்களாக மாற, k (க) என்பது அங்கு, பகல் முதலிய சொற்களில் g என்றும், p (ப) என்பது தபு, தம்பி முதலிய இடங்களில் b என்றும், c (ச) என்பது அஞ்சு முதலிய சொற்களில் என்றும், t (ட) என்பது அஞ்சு பண்டு, படு முதலிய சொற்களில் d என்றும் ஒலிக்கப்பெறும்போது, அவற்றைப்போல, உரசு ஒலியாய் நின்ற ஆய்தமும் உயிர்ப்பிசையாம் உரசு ஒலி (Breathed fricative) ஆகாது ஒலிப்பிசையாம் உரசு ஒலியாயிற்று (Voiced fricative) ஒலிப்பிசையானபின் அஃது அளபெடுப்பது எளிது ஒலிப்பெழுத்தன்றோ அளபெடுக்கும்? இந்த உரசு ஒலியும் பெரும்பான்மையும் மெல்லண்ண உரசு ஒலியாகவே நிலைத்துவிட்டது எஃகு-எஃஃகு வெஃகு= வெஃஃகு (தொல் எழுத் 40, நச்சினார்க்கினியர் மேற்கோள்) என அளபெடுத்து வரலாயிற்று ஆய்த அளபெடை என இலக்கணப் புலவர்களும் இதனைப் பேசலாயினர் பல்லவர் காலத்து இவ்வாறு நிகழ்ந் திருக்கலாம் இஃது=இய்து, அஃது=அய்து கஃசு=கைசு என வழங்கவும் இக்காலத்தே காண்கிறோம் (யாப் பருங்கல விருத்தி, சூ 2உரை) இதற்கு விதிபோல நன்னூல் சூத்திரத்தைத் திருத்திப் பொருள் கண்டாரும் உண்டு 'அம் முன் இகரம் யகரம் என்றிவை எய்தின் ஐ ஒத்திசைக்கும் (நன்னூல் 125) என்பதற்கு 'அம்முன் இகரம் ஆய்தம் என்றிவை எய்தின் ஐ ஒத்திசைக்கும்’ என்ற பாடமும் உண்டு இஃதே என்பது இய்தே என்பது போல ஒலித்து, மைதோய், எய்தா, கைதா என்றவற்றோடு எதுகை கொள்ளவும் (ll, x2) அஃதே, அஃகா என்பனவும் அவ்வாறு கொய்பூம், செய்கோ என்றவற்றோடு எதுகை கொள்ளவும் (IV, , ri) நம்மாழ்வார் திருமொழியில் காண்கிறோம்.

ஆய்தம் தொல்காப்பியர் கூறியபடி சார்ந்து வரும் வல்லெழுத்தின் பிறப்பிடமே தனக்கும் பிறப்பிடமாகக் கொண்டுவருகிற நிலை மெல்ல மறைந்தது மெல்லண்ண