பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாரியைகள் பெற்றுக் க-னா, க.ஆனா எனப் பள்ளிச் சிறுவர் வாயில் இஃது ஒலிக்கும் ஆனா என்பது ஏனம் என்ற பழைய சாரியையின் மருவிய வழக்குப்போலும் க் என்பது இக்கன்னா, இக், என்று இன்று ஒலித்துக் காட்டப் பெறும்

தனிநின்று ஒலிப்பது - தானே தனி நின்று அலகு (Syllable) பெறுவது உயிர் என்றும், உயிர் இன்றி இயங்காதது-பாட்டில் அலகு பெறாதது-மெய் என்றும் பெயர் பெறும் இவை அழகிய, பொருள் நிறைந்த உவமைப் பெயர்களாகும் உயிரினும் ஒலி குறைந்தவை அழுத்தம் குறைந்தவை மெய்யெனப் பெயர் பெறும் உயிரை ஒலிக்கும்போது யாதொரு தடையும் வாயில் எழுவதாகத் தோன்றுவதில்லை; மெய்யினை ஒலிக்கும் போது ஏதோ ஒருவகையான தட்டுப்பாடு எழுவது போலத் தோன்றுகிறது. இதனால் ஒற்று என்பது மெய்க்குப் பெயராக அமைந்தது.

GTG!pág,156it a u%ff G|List ogir (Breathed sounds), ஒலிப்பொலிகள் (Voiced s ) என இருவகையாகும் குரல்வளையில் உள்ள குரல் நாண்கள் ஒன்று கூட, மச்சு அத்தடையைத் தாண்டி, அவற்றின் இடையே புகுந்து வெளிவரும்போது அந்த இதழ்கள் துடிக்கத் தொடங்கு கின்றன. அவையே ஒலிப்பொலிகளாகும் அ என ஒலிக்கும்போது ஊட்டியில் (Adam's apple) கை வைத்துப் பார்த்தால் இந்தத துடிப்புப் புலனாகும் குரல் இதழ்கள் இடையூறு தோன்ற நிற்கும்போது மூச்சுத் தடைப்படாது வெளிவருமானால் உயிர்பொலி தோன்றும் K என்பது த் என்பதன் உயிர்பொலி: G என்பது அதன் ஒலிப்பொலி, தொடர்ந்தொலிக்கும் ஒலி தொடரொலியாகும் (Continuant)

எழுத்துகளின் ஒலி வாயொலியாக முழுவதும் வெளி வருவதும் உண்டு; அப்போது மெல்லண்ணம் மேலே ஓங்கி நின்று மூக்குக்கும் வாய்க்கும் இடையில்