பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 85

வந்தபோது அவற்றின்பின் க் என்பதன் முன் சாரியை வரும்; வந்தபோது ககரம் இரட்டிக்கும்; வகரம் முன் வந்தால் சாரியை பெறும்; அல்லது ஆய்தமாகும் பார்க்க: ஃ)

தமிழில் வரும் க் என்ற எழுத்துப் பலவகை ஒலிகளாக ஒலிக்கக் காண்கிறோம். அறிஞர் கால்டுவெல் வெடிப்பெழுத்துக்கள், மொழிக்கு முதலிலும், இடையே இரட்டித்து வருகையிலும் k முதலிய போன்ற உயிர்ப் பொலியாகவும், மொழிக்கிடையே உயிர் எழுத்துக்களின் நடுவே ஒற்றையாய் வரும்போது மெல்லெழுத்தின் பின் வரும்போதும் g முதலிய போன்ற ஒலிப்பொலியாகவும் மாறும் என்ற ஒரு நியதி கண்டு, அதற்கு, டியிர்ப்பொலி spaúlio Gustað Lomb spić & Lib’ (Law ofconvertibility of surds and sonants) எனப் பெயரிட்டு, அதனைத் திராவிட மொழி இனத்தின் சிறப்பியல்பு எனக் கூறுகிறார் இப்போது இங்ங்னம் ஒலித்தாலும் எப்போதும் இவ்வாறு இவை ஒலித்தன அல்ல என்பர் ஒரு சாரார். பழைய திண்ணைப் பள்ளிக்கூடங்களில் இந்த ஒலி வேற்றுமையை வற்புறுத்தக் கணக்காயர்கள் க் என்பது போன்ற ஒலியைத் தனியாகவும் 'ங் க’ என்பது போன்ற ஒலியை வேறாகவும் கற்பித்து வந்தனர். -

இந்த வேறுபாடு முன்பின் வரும் எழுத்துக்களின் சாயல் படிவதால் எழுவதாகும். கு என்று ஒலிக்கும் போது க் என்பது உள்நாக்கிற்கு அருகாக ஒலிக்கவும், கி என்று ஒலிக்கும்போது வல்லண்ணம் தொடங்கு மிடத்திற்கு அருகாக ஒலிக்கவும் காண்கிறோம். இகரம் வல்லண்ண உயிர் ஆதலின் கி என்பதில் வரும் க் வல்லண்ணச் சாயல் (Palatalisation) பெற்று ஏறக்குறைய என்பதுபோல் ஒலிக்கும். இதனால் முதன் முதலில் சகர ஒலியே இருந்ததில்லை என்றும், கெம்பு=செம்பு; கை=செய்; கெவி=செவி என இவ்வாறு ககரம் மாறுவ தால் சகர ஒலி தோன்றியது என்றும் கூறுவாரும் உண்டு.