பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7

ஒரு மனிதன் எத்தனை மொழிகள் பேசுகின்றானோ, அத்தனை ஆன்மாக்கள் உள்ளன, என்பது ஒரு மேலை நாட்டு பழமொழி.

மனிதர்களுக்கு இயல்பாகவே பிறமொழிகளைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் மனதில் ஊறிக்கிடக்கிறது. உலகெங்கிலும் உள்ள மனிதர்கள் இந்த முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

ஆர்வத்துடன் இயல்பாய் ஒருமொழியை கற்கும் போது அது மகிழ்ச்சியுடன் எளிதாக வெற்றியடைய முடிகிறது.

வளர்ந்துவரும் நவீன உலகப்போக்கு மக்களின் தொடர் பிறமொழிகளை கற்பது, நேசிப்பது கட்டாய தேவையாகும். அப்போதுதான் நாடுகளிடையே உள்ள தொடர்புகள், உறவுகள், நெருங்குவதால் அன்புலகம் தோன்றும்; தோன்ற வேண்டும்.

நவீன உலகில் அரசியலார், வணிகத் தொடர்புடையயோர், போன்றோர் பலமொழிகள் கற்று, தங்கள் வாழ்க்கைத் தேவைகளை உயர்த்தி கொண்டு வளமாய் வாழ்க்கையில் சாதாரண மக்களும் இந்த உலகத்தொடர்பு மொழிகளை கற்று வாழ்வதில் என்னதவறு இதனை மேற்கொண்ட அரசியல்வாதிகள் மொழியின் பேரால் பகைமைப்பாரட்டி சாதாரண மக்களை தங்கள் சிந்தனான வளர்ச்சியை அதன் பாதளத்துக்கு தள்ள மொழிப் பகைமையை வளர்க்கின்றனர் என்பதை மக்கள் உணரவேண்டும்; உணருவர்.

உயிரினங்களில் மனிதர்கள் மட்டுமே அனைத்தையும் நேசிக்கும் உள்ளம் கொண்டவன் இயற்கையை பிற உயிரினங்களிடத்தில் அன்பு பாராட்டுகிறவன் மனிதன் மட்டுமே. விலங்கினங்கள் தான் தன் இனத்தை மட்டுமே நேசிக்கும் பிறவற்றை அது நேசிக்க தெரியாது. எனிலும் ஏனெனில் அது ஐந்தறிவு உடையது. ஆனால் ஆறறிவு பெற்ற மனிதன் பிற மொழிகளை வெறுப்பதும் பகைமை பாராட்டுவதும், அழித்தொழிக்க எண்ணுவதும்; ஏளனம் பேசுவதும் சுயஇன்ப புத்தி படைத்த விலங்கினங்களுக்கு நிகரான புத்தி படைத்தவரே!

படைக்கப்பட்ட உலகமாந்தர் அனைவரும் சமம் என்பது போல கருத்துகள் சுமக்கும் வாகனங்களான மொழிகளும் சமமானவையே!