பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

நாவன்மை நாயர் அவர்களுக் கேற்பட்டது சுவாமிகள் அளித்த தனிப்பட்ட பயிற்சியினாலும், சுவாமிகளின்பால் நாயரவர்களுக்கிருந்த ஆசிரிய பக்தியினாலும்தான் என்று எனது தந்தையார் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அக் காலத்தில் தமிழ் நாட்டில் நடைபெற்று வந்த எல்லா நாடக சபைகளிலும் சுவாமிகள் ஆசிரியராக இருந்திருக்கிறார்.

சென்ற ஐம்பது ஆண்டுகளுக்கிடையே தமிழகத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய நடிகர்களான திருவாளர்கள் ஜி. எஸ். முனுசாமி நாயுடு, ஜெகந்நாத நாயுடு, சாமிநாத முதலியார், சீனிவாச ஆழ்வார். நடேசபத்தர், ராஜா வி. எம். கோவிந்தசாமிப் பிள்ளை, எம். ஆர். கோவிந்தசாமிப் பிள்ளை, சி. கன்னையா, சி. எஸ். சாமண்ணா ஐயர், மகாதேவய்யர், சூரிய நாராயண பாகவதர், சுந்தரராவ், கே. எஸ். அனந்தநாராயண ஐயர், கே. எஸ்.செல்லப்ப ஐயர், பைரவ சுந்தரம் பிள்ளை, சீனிவாச பிள்ளை முதலியோரெல்லாம் நமது சுவாமிகளிடம், பயிற்சி பெற்றவர்கள், அவரது பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. நடிகையரிலும் திருமதிகள் பாலாம்பாள், பாலாமணி, அரங்க நாயகி, வி. பி. ஜானகி, கோரங்கி மாணிக்கம், டி. டி. தாயம்மாள் முதலிய பலர் சுவாமிகளின் மாணவிகள் ஆவார்கள்.

சொந்த நாடகக் குழு

சமரச சன்மார்க்க நாடக சபை என்ற பெயரால் சுவாமிகள் தாமே சொந்தத்தில் ஒரு நாடக சபையையும் சில ஆண்டுகள் நடத்தினார். இந்த நாடகக் குழுவிலே தான் தமிழ் நாடக மேடையின் மங்காத ஒளி விளக்காகத் திகழ்ந்த எஸ். ஜி. கிட்டப்பாவும் அவரது சகோதரர்களும் பயிற்சி பெற்றனர். இசைப் புலவராக இன்று நம்-