பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

உயர்ந்த கருத்துக்கள் நிறைந்திருக்கும்; அதே சமயத்தில் கல்லாதாருக்கும் பொருள் விளங்கக்கூடிய முறையில் எளிமையாகவுமிருக்கும்.

பாடல்கள் எழுதும்போது சுவாமிகள் சொற்களைத் தேடிக் கொண்டிருப்பதில்லை. எதுகை, மோனை, நயம், பொருள் இவற்றுடன் சொற்கள் அவரைத் தேடிவந்து நிற்கும். ஒரே நாளிரவில் ஒரு நாடகம் முழுவதையும் கற்பனையாக எழுதி முடிக்கும் அரும்பெரும் ஆற்றல் சுவாமிகளுக்கிருந்தது.

ஒரு முறை எழுதியதை அடித்துவிட்டுத் திருத்தி எழுதும் வழக்கம் சுவாமிகளிடம் இருந்ததில்லை. அடித்தல் திருத்தல் இல்லாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டே போவார். சிந்தனை செய்ய நேரும் சந்தர்ப்பங்களில் எழுதுவதை நிறுத்தாமல் சிவமயம், வேலும் மயிலுந் துணை என்று பலமுறை எழுதிக் கொண்டே இருப்பார். இரண்டொரு பக்கங்கள் இவ்வாறு எழுதியபின் மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து பாடலைப் பூர்த்திசெய்வார். சுவாமிகள் எழுதிய நாடகக் கையெழுத்துப் பிரதிகள் இந்த உண்மையை அறிவிக்கின்றன.


வீர அபிமன்யு

சுவாமிகளின் புலமைக்கு எடுத்துக்காட்டாக எண்ணற்ற சம்பவங்கள் இருக்கின்றன. அவற்றில் அதிசயிக்கத்தக்க ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் கூறுகிறேன் :

நான் நடிக்கத் தொடங்கிய காலத்தில் அநேகமாக எல்லா நாடகங்களிலும் எனக்கு நாரதர் வேடமே கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு நாள் நாடக சபையின் உரிமையாளர்களில் ஒருவரான திரு. பழனியா பிள்ளை அவர்கள் சுவாமிகளிடம், “சுவாமி ! சண்முகம் கதாநாயகனாக நடிப்பதற்கு ஏற்றபடி ஒரு நாடகம் எழுதுங்கள்” என்று