பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10❖

தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்



சரியான நேரத்தில் விழித்துக் கொள்வார்கள், தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது

சிறிய நூல் என்றாலும் மிகச் சிறந்த நூல் எல்லோரும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய நூல் இது ஒரு வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய நூல் மட்டுமல்ல; தமிழர்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஒரு வரலாற்று ஆவணம் அதை அழியாத கருவூலமாக வைத்துக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழர்களுக்கு இருக்கிறது தமிழ் உணர்வுள்ளவர்களுக்கு இருக்கிறது. தமிழ்ச் சிந்தனை உள்ளவர்களுக்கு இருக்கிறது அதற்கு வழிவகுத்த தம்பி டி கே எஸ் கலைவாணன் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்து, இந்த நூலை உருவாக்கித் தந்த என்னுடைய ஆசிரியர் , எனது வாழ்க்கையின் வழிகாட்டி அமரர் அவ்வை டி கே சண்முகம் அண்ணாச்சி அவர்களுக்கும், இதனை அழகிய முறையில் மறுபதிப்புச் செய்து, தெளிவான முறையில் அச்சிட்டு வெளியிடும் இலக்கியச்சுடர் மூவேந்தர்முத்து அவர்களின் பூவழகி பதிப்பகத்திற்கும், என்னுடைய வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.