பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி.கே. சண்முகம் * 13

நாடகத் தலைமையாசிரியர் முதல் பதிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு 1957. அப்போது நூலின் விலை எட்டணாதான் அதன் படிகள் ஒன்றுகூட இல்லாத காரணத்தினால், அதனை மறு பதிப்பாக வெளியிட எண்ணி, நம் பூவழகி பதிப்பகத்தின் உரிமையாளர் இலக்கியச்சுடர் அண்ணன் மூவேந்தர் முத்து அவர்களை அணுகினேன் அவரும் பரிபூர்ண சம்மதத்தோடு இந்நூலை மறுபதிப்புச் செய்திருக்கிறார் அவருக்கு என் இதயபூர்வமான நன்றியினை என் சார்பினும், சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றத்தின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன் இதனை அழகுற அச்சிட்டுக் கொடுத்த மூவேந்தர் அச்சகத்தார்க்கும் என் நன்றி.

மேலும், இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி, வாழ்த்திய தமிழக முன்னாள் அமைச்சர் - அருளாளர் - அண்ணன் இராம வீரப்பன் அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இன்று சுவாமிகளின் நினைவாக சென்னையில் எங்கள் மன்றமும், மதுரையில் சுவாமிகளின் திருவுருவச் சிலையும், புதுவையில் அவருடைய சமாதியும், நினைவு மண்டபமும் இருக்கின்றன மேலும், சுவாமிகளின் பெயரால் மாணவர் களுக்குப் பயன்பெறும் வகையில் நினைவுச் சொற்பொழிவுகள் நிகழ்த்த, தமிழகத்தின் சில பல்கலைக்கழகங்களில் அறக் கட்டளைகள் நிறுவப்பெற்றிருக்கின்றன இனி மத்திய அரசின் சார்பில் சுவாமிகளின் உருவம் கொண்ட ஒர் அஞ்சல்தலை வெளிவர வேண்டும் விரைவில் வரும் என்று நம்புகிறோம்

தமிழ் மொழியும், தமிழ் நாடகக் கலையும், தமிழ்க் கலைஞர்களும் இருக்கும்வரை சுவாமிகளின் புகழ் என்றும் மறையாமல் நின்று நிலவும் - ஒளிவீசும் என்பதில் ஐயமில்லை வாழ்க சங்கரதாசரின் புகழ்! வளர்க தமிழ்நாடகக் கலை!