உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டி.கே.சண்முகம்

❖15


போற்றப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் மதுரை தத்துவ மீனலோசினி வித்துவபால சபையில் நடிகராகச் சேர்ந்தார். 74 நாடகங்களில் பல்வேறு குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து, நடிப்பால் மக்கள் மனத்தை ஈர்த்தார். அவற்றுள் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் அறநெறி பாடல்களைப் பாடிய பழந்தமிழ்ப் பெண்பாற்புலவரான ஔவை என்பவரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக்கி வயது முதிர்ந்த ஒளவைப்பாட்டி வேடத்தை இவர் தாங்கிச் சிறப்பாக நடித்து, தமிழறிஞர் பெருமக்களின் பாராட்டைப் பெற்றார் அதன் பின்னர் இவர் ‘ஔவை சண்முகம்’ என்று அந்தப் பாத்திரப் பெயர் அடை மொழியுடன் அழைக்கப்பட்டார்

1922-இல் அன்னியப் பொருட்களை எதிர்த்து நாடெங்கும் தேசப் பிதா காந்திஜி கதர் இயக்கம் என்ற ஒரு தனி இயக்கத்தை ஆரம்பித்த நேரத்தில் “கதரின் வெற்றி” என்றொரு நாடகத்தைத் தயாரித்தார்.

கதரின் பெருமைபற்றி விளக்கிய அந்த நாடகம்தான் தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பெற்ற தேசியச் சமூக நாடகமாகும் அந்த நாடகத்தின் பாத்திரங்களை யாவரும் கதர் உடுத்தி நடித்தார்கள். பின்னர் 1931இல் வங்கம் தந்த சிங்கம் சுதந்திரப்போர் வீரர் பகத் சிங்கை வைத்துத் தேசபக்தி என்னும் நாடகத்தை மேடையில் இயற்றினார்

இந்நாடகத்தில் பாடப்பட்ட பாடல்கள் மக்களிடையே விடுதலை வேட்கையைத் தூண்டிவிட்டன. இந்த இரு நாடகங்களும் ஆங்கில அரசால் பின்பு தடை செய்யப்பட்டன. பெரியவர்களுக்கு மட்டுமின்றி, சிறுவர்களுக்கான ‘அப்பாவின் ஆசை’ என்ற நாடகத்தையும் அரங்கேறச் செய்து வெற்றி கண்டார்

1941இல் மதுரைத் தமிழ்ச் சங்கம், இவருக்கு ‘முத்தமிழ் கலா வித்துவரத்தினம்’ என்னும் பட்டத்தைச் சூட்டியது