பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டி.கே. சண்முகம் & 17

    தம் 50 ஆண்டு கால நாடக வாழ்க்கையை இவர், 'எனது நாடக வாழ்க்கை' என்னும் தலைப்பில் நாடக வரலாற்று நூலாக எழுதி வெளியிட்டு இருக்கிறார் தம் நாடக வாழ்க்கையை முதன்முதலாக நூலாக, வெளியிட்ட முதல் நடிகரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுப் பெருமை சேர்த்தது 'எனது நாடக வாழ்க்கை' நூல் மூவேந்தர் அச்சகத்தில் அச்சிடப் பெற்றதும் ஒரு பெருமைதானே!
    நூல் அச்சாகும்போது மூவேந்தர் அச்சகத்துக்கு அண்ணன் தே ப பெருமாள் அவர்களோடு அடிக்கடி வருவார் காலையில் சண்முகம் அண்ணாச்சி தம்பி தி க பகவதி அவர்களோடு நடந்து வரும்போது, எங்கள் வீட்டுக்கு வந்து என்னை அழைத்துப் பேசிவிட்டுத்தான் இருவரும் செல்வர் அவ்வளவு பண்பானவர்
    மேலும், தம் நாடக மேடை அனுபவங்கள் சிலவற்றைத் தொகுத்து 'நெஞ்சு மறப்பதில்லையே' என்ற நூலாக வெளியிட்டு உள்ளார் அவருடைய நாடக சம்பந்தமான சிறந்த கட்டுரைகளும் வானொலியில் இவர் இயற்றிய உரைகளையும் தொகுத்து நாடகச் சிந்தனைகள் என்னும் தலைப்பிலும் ஒரு நூல் வெளிவந்தது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மன்றத்தின் சார்பில் இவரது 'எனது நாடக வாழ்க்கை' என்னும் நூல், 1974ஆம் ஆண்டில் நம் நாட்டின் சிறந்த சுயசரிதை நூலுக்கான முதல் பரிசும் ரொக்கமும் பெற்றுள்ளது
    அண்ணாச்சி ஒளவை டி கே சண்முகம் மணிவிழா ஏ வி எம் இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடை பெற்றது இந்த விழாவில் நாங்கள் குடும்பத்தோடு சென்று வாழ்த்துப் பெற்றோம். அப்போது நடிகை எம் எஸ் திரெளபதியும வந்திருந்தார்