பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டி.கே. சண்முகம் 令27

நாதய்யர், அல்லி பரமேஸ்வரஐயர்ஆகியோர் நடத்தி வந்த நாடக சபைகளில் சுவாமிகள் சில ஆண்டுகள் இருந்தார். திருவாளர் பி.எஸ். வேலு நாயர் அவர்களின் ஷண்முகானந்த சபையிலும் நெடுங்காலம் சுவாமிகள் பணிபுரிந்தார். திரு.பி.எஸ். வேலு நாயர் அவர்களும், எனது தந்தையார் திரு. டி.எஸ். கண்ணுச்சாமிப் பிள்ளை அவர்களும் ஆசிரியர் சுவாமிகளின் அன்புக்குரிய மாணவர் களாவார்கள். திரு. வேலு நாயர் அவர்களின் குழு விலிருந்தபோதுதான் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் 'மனோஹரன்' நாடகத்திற்குச்சுவாமிகள் பாடல்கள் இயற்றினார்.

மாணவ மாணவியர்

தமிழ் நடிகருலகில் திரு. வேலு நாயர்அவர்களின் பேச்சுத் திறனைப் புகழாதாரில்லை. இத்தகைய நாவன்மை நாயர் அவர்களுக்கேற்பட்டது சுவாமிகள் அளித்த தனிப்பட்ட பயிற்சியினாலும், சுவாமிகளின் பால் நாயரவர்களுக்கிருந்த ஆசிரிய பக்தியினாலும் தான் என்று எனது தந்தையார் சொல்லக் கேட்டிருக் கிறேன்.

அக்காலத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த எல்லா நாடக சபைகளிலும் சுவாமிகள் ஆசிரியராக இருந்திருக்கிறார்.