பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 & தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்


எம்.வி. மணி, டி. பாலசுப்பிரமணியம், கே. சாரங்க பாணி, எஸ்.வி. வெங்கட்ராமன், நவாப் டி.எஸ். இராஜமாணிக்கம், எம். ஆர். ராதா முதலிய எண்ணிறந்த நடிகர்கள் மதுரை பாலமீன ரஞ்சனி சங்கீத சபையில் இருந்தவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

தத்துவ மீனலோசனி சபை

சிலகாலம் அந்தச் சபையில் இருந்த பிறகு திரு. ஜெகந்நாதய்யர் அவர்களுடன் ஏற்பட்ட மனத் தாங்கலின் விளைவாகச் சுவாமிகள் மதுரைக்கு வந்து சில நண்பர்களின்கூட்டுறவோடு 1918-ஆம் ஆண்டில் தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபா என்ற நாடகக் குழுவைத் தோற்றுவித்து அதன் ஆசிரியராக அமர்ந்தார்.

எங்கள் குருநாதர்

இந்தக் குழுவில்தான் டி.கே.எஸ். சகோதரர்கள் என்று குறிக்கப்படும் நாங்கள் சேர்க்கப்பட்டோம்.

1918-ஆம் ஆண்டு முதல் 1922-ஆம் ஆண்டுவரை ஏறக்குறைய நான்காண்டுகள் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளிடம் நாடகக் கல்வி பயிலும் நற்பேற்றினைப் பெற்றேன். அவருடைய அறிவாற்றலைப்பற்றி நன்கு அறிந்துகொள்ள முடியாத பருவம். இன்று உணருகிறேன் எங்கள் குருநாதரின் பெருமையை.