பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 & தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

வழக்கத்தில் வந்தது. இவ்வாறு நடைபெறும் உரையாடல்கள் சில சமயங்களில் வரம்பு மீறிப் போய்விடுவது முண்டு.

    இந்தச் சமயத்தில்தான் நமது சுவாமிகள் தமிழ் நாடக உலகில் ஒழுங்கும் கட்டுப்பாடும் நிலவ வழிகோலினார். அந்தக் காலத்திலே நடைபெற்று வந்த புராண, இதிகாச, கற்பனை நாடகங்களுக்கெல்லாம் பாடல்களும் உரையாடல்களும் எழுதி வரம்புக்குட்படுத்தியதோடு, புதிய நாடகங்கள் பலவற்றையும் இயற்றி உதவினார்.
    இவ்வாறு எழுதப்பட்ட நாடகங்களே சென்ற இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் நாடக மேடைக் கலை அழிந்து போகாமல் காப்பாற்றி வந்தன. இன்றும் ஸ்பெஷல் நாடக நடிகர்கள் பலருக்கு உயிர் கொடுத்து நிற்பவை சுவாமிகளின் கோவலனும், வள்ளி திருமணமும், பவளக் கொடியும்தாம்.
    ஒரு நாடகம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், அந்நாடகத்தில் பங்கு கொள்ளும் நடிகர்களிடையே ஒழுங்கும் நியதியும் கட்டுப்பாடும் இருக்க வேண்டும். சுவாமிகள் தமது வாழ்நாள் முழுதும் இதையே வலியுறுத்தி வந்தார்.
    தமிழகத்திலே முன்பு நடைபெற்று வந்த பல நாடகங்களை உங்களிற் சிலர் பார்த்திருக்கலாம். ஒரு