பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டி.கே. சண்முகம் *41

களெல்லாம் இப்போது எனக்குத் தேறுதல் கூறுவது போல் ஒலிக்கின்றனவே!...

"துந்துபிகளெல்லாம் தும்தும்தும் என்றும், சங்கு களெல்லாம் பம்பம்பம் என்றும், தாளவகைச்சல்லரி மல்லரி கரடிகைகளோ தீம் தீம் தீம் என்றும், முரசு, பேரிகை, மிருதங்கங்களோ தோம் தோம் தோம் என்றும் தொனிக்கின்றன. ஆகவே, இவ்வகை வாத்திய ஒலிகள் எல்லாம் ஒன்றுகூடி தும்பம் தீம் தோம், தும்பம் தீம்தோம், துன்பம் தீந்தோம், துன்பம் தீர்ந்தோம் என்னும் பொருளைக் கொடுக்கலாயின. ஆஹா நான் செய்த பாக்கியமே பாக்கியம்."

இந்த வசனத்தைச்சுந்தரி பேசி முடித்ததும் அந்த நாளில் சபையோர் நீண்ட நேரம் கைதட்டித் தங்கள் பாராட்டைத் தெரிவிப்பார்கள். இந்த அருமையான கற்பனைஒரே இரவில் எழுதி முடித்த ஒருநாடகத்தில் இருந்தது என்பதை எண்ணிப்பார்க்கும்போது சுவாமி களின் புலமை நன்கு புலனாகும். கோவலன்

சுமார் 43 ஆண்டுகளுக்குமுன் சுவாமிகளால் எழுதப்பட்ட கோவலன் நாடகம் மிகப் பிரசித்தி பெற்றது. தமிழ் நடிகர்கள் அனைவரும் இந் நாடகத்தை நடித்திருக்கின்றனர். புகழ்பெற்ற இந்தக் 'கோவலன்' நாடகத்தை இன்று புலவர்கள் சிலர் கண்டிக்கின்றனர்; குறை கூறுகின்றனர். ஐம்பெருங்