பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 & தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

என்று குறிப்பிட்டு எழுதியதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டுமென மக்கள் குழப்பம் செய்தனர். சுவாமிகள் தமது கரங்களை உயர்த்தி அமைதியாக இருக்கும்படி வேண்டிக்கொண்டு தமது கருத்தை விளக்கத் தொடங்கினார்.

"மா என்ற சொல் திருமகளாகிய இலக்குமி யையும், பா என்ற சொல் கலைமகளாகிய பாரதி யையும், வி என்ற சொல் மலைமகளாகிய பார்வதி யையும் குறிக்கிறது” என்று கூறி, அதற்கு ஆதாரமாகப் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத் திலிருந்து சில செய்யுட்களைப் பாடி விளக்கம் தந்தார். "மாபாவியோர்கூடி வாழும் மதுரை"என்றால், திருமகளும் கலைமகளும் மலைமகளும் சேர்ந்து வாழும் மதுரை என்று பொருள்படுகிறது. அதாவது, சகல செல்வங்களும் நிறைந்து விளங்கும் மதுரையில், செல்வம் கொழிக்கும் அத்திருநகரில் இந்தச் சிலம்பை வாங்க ஆள் கிடைக்காதே என்ற கருத்துப்பட "மாபாவியோர்கூடி வாழும் மதுரைக்கு மன்னா போகாதீர்" என்று மதுரை நகரைப் பெருமையாகக் குறிப்பிட்டிருக்கிறேனே தவிர, "சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கில்லை" என்றார். சபையோர் சுவாமிகளின் புலமையை வியந்து கை தட்டிப் பாராட்டினார்கள். முன்வரிசையில் இருந்த மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர் ஒருவர் எழுந்து, "சுவாமிகளே! நீர் எந்தக்கருத்தில் எழுதியிருந்தாலும்