பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி.கே. சண்முகம் & 49

கருநிற மேனியுடன் சுவாமிகள் மேடைக்கு வரும் போது, பயந்த சுபாவமுடையவர்கள்கண்களை மூடிக் கொள்வார்களாம்.

ஒரு நாள் சனிசுவரனாக நடித்துவிட்டு விடிய நான்கு மணிக்கு அப்படியே வேடத்தைக் கலைக்காமலேயே எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சுவாமிகள் வெளியே சற்று தொலைவிலிருந்த ஒரு கிணற்றுக்குச் சென்றாராம். கருக்கிருட்டில் கிணற் றிலிருந்து தண்ணிரெடுத்துக் கொண்டு எதிரே வந்த ஒரு மங்கை இவரது தோற்றத்தைக் கண்டு அந்த இடத்திலேயே மாரடைப்பினால் உயிர்துறந்தாராம்.

இவ்வாறு பல நிகழ்ச்சிகள் அடிக்கடி ஏற்பட்டு வந்ததின் விளைவாகச் சுவாமிகள் நடிப்பதைக் கைவிட்டு ஆசிரியப் பணியை மட்டும் மேற் கொண்டதாகத் தெரிகிறது.

சுவாமிகள் வேடம் பூண்டு நடிப்பதைப் பார்க்கக் கொடுத்து வைக்காவிட்டாலும், மற்றவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக நடித்துக் காட்டுவதை நான் பார்த்திருக்கிறேன். அதுவும் எமன், இரணியன், சிறுத் தொண்டரில் காள பைரவர், கடோத்கஜன் முதலிய வேடங்களைத்தாங்குவோருக்கு அவரேதான்நடித்துக் காட்டுவார். கண்களை உருட்டி விழித்துக் கோபக் கனல் தெறிக்கப் பற்களை நற நற வென்று கடிக்கும்போது எங்களுக்கெல்லாம் சுவாமிகளைப்