பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

ஆண்ட சக்கரவர்த்தி

கம்பெனியில் திங்கட்கிழமைதோறும் பஜனை நடைபெறுவது வழக்கம். நாங்களெல்லோரும் கூட்டமாகவும் தனித் தனியாகவும் சுவாமிகளின் பாடல்களைப் பாடுவோம். மதுரையில் ஒரு நாள் புட்டுத் தோப்பிலுள்ள கம்பெனி வீட்டில் திங்கட் கிழமை பஜனை வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. சித்திரைத் திருவிழா நடைபெறும் சமயம். இரவோடு இரவாக சுவாமி ஊர்வலம் புறப்பட்டுப் புட்டுத் தோப்புக்கு வருகிற நாள். பஜனையில் நாங்களெல்லோரும் பாடி முடித்த பிறகு, வந்திருந்த சில நண்பர்களும் தனித் தனியே பாடினார்கள். கடைசியாகச் சுவாமிகளைப் பாட வேண்டுமென்று எல்லோரும் வற்புறுத்தினார்கள். “எவ்வளவு நேரம் பாடவேண்டும்?' என்று கேட்டார் சுவாமிகள். "தங்கள் மனம்போல் பாடுங்கள்” என்றார் ஒருவர். திருவாளர்.பழனியாபிள்ளை அவர்கள், "சுவாமி ஊர்வலம் இங்கு வருகிறவரை பாடுங்கள்" என்றார்.

திருப்புகழ்ச் சந்தத்தில் ஆண்ட சக்கரவர்த்தி என்று பாடத் தொடங்கினார் சுவாமிகள். பாடிக்கொண்டேயிருந்தார். ஏற்கெனவே நெட்டுருப் போட்டிருந்த பாடலன்று; அப்போதுதான் கற்பனையாக எழுந்த பாடல். எல்லோரும் வியப்பே வடிவாக வீற்றிருந் தனர். பாடல் முடியவில்லை. மேலும் தொடர்ந்து பாடிக்கொண்டே பரவச நிலையிலிருந்தார்