பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4 ❖

தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்


பெரியவர்கள் யாரேனும் இப்பணியைச் செய்திருந்தால் பெருமகிழ்ச்சியடைந்திருப்பேன் என்ன செய்வது? எவரும் முன்வரவில்லை

எனக்குத் தெரிந்த சில குறிப்புகளும் என்னுடன் மறைந்து விடக்கூடாதே என்னும் எண்ணத்தால் எழுதத் துணிந்தேன் பிழையிருப்பின் பொறுத்தருள்க.

இது, எனக்கு நாடகக் கல்வி பயிற்சி நல்வழி காட்டிய குருநாதருக்கு நான் செலுத்தும் நன்றிக் கடன்

இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகளையும் எனக்கு அறிவித்த பெரியோர்களுக்குத் தலை வணங்குகிறேன்

சுவாமிகளின் புலமைக்குச் சான்று கூறும் ஒரு பாடல் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. அது தமிழ்ப் பேரறிஞர்கள் அவரை நன்கறிந்து கொள்ளத் துணை செய்யுமென்று நம்புகிறேன்.

சுவாமிகளின் நாடகங்களையும் நூற்றுக்கணக்கான தனிப் பாடல்களையும் நல்ல முறையிலே மீண்டும் அச்சியற்ற வேண்டும், அவை இலக்கிய உலகிலே இடம் பெற வேண்டும், புதுச்சேரி மண்ணிலே சுவாமிகளின் திருவுருவை மறைத்த இடத்திலே ஒரு மண்டபம் எழுப்ப வேண்டும்.

இவை நான் காணும் கனவுகள் காலம் இவற்றை நனவாக்கட்டும்.

'அவ்வையகம்'

சென்னை டி. கே. சண்முகம்

மன்மத-ஐப்பசி-22