பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 & தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

சுவாமிகள். சற்று நேரத்தில் சுவாமி ஊர்வலம் வருவதை அறிவிக்கும் நாதசுர இன்னிசை கேட்டது. மேளச் சத்தம் தனது பாட்டுக்கு இடையூறாக வந்த நிலையில் பாடலை முடித்தார்சுவாமிகள். சுமார் ஒரு மணி நேரம் சுவாமிகள் பாடியதாக எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.

புகழ் பாட மறுத்தல்

அக்காலத்தில் தமிழறிஞர்களையும் புலவர் களையும் ஆதரித்து வந்த வள்ளல் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்சுவாமிகளைக் காணவிரும்பினார். மன்னருடைய காரியதரிசி ஒருவர் சுவாமிகளை அணுகி, 'நமது சேதுபதி மன்னரைப் பாடாத புலவர்கள் ஒருவருமில்லையே! சுவாமிகள் மட்டும் ஏன் இன்னும் மன்னர்மீது பாடவில்லை? நேரில் வந்து ஒரு பாடல் பாடினால் உங்களுக்குக் கனகா பிஷேகம் செய்வாரே மன்னர் என்றார்.

சுவாமிகள் தொடக்க முதலே மனிதர்களைப் புகழ்ந்து பாடுவதில்லையென்று நோன்பு கொண்டவர். ஆதலால் மன்னர்மீது புகழ்மாலை பாட மறுத்துவிட்டார். மீண்டும் மீண்டும் பலர் வந்து இதுபற்றி வற்புறுத்தியபோது சினங்கொண்டு, “மன்னனும் மறவன்; நானும் மறவன்; என்னைவிட மன்னன் எந்த வகையிலும் உயர்ந்தவனல்லன். எதற்காக நான் அவனைப் புகழ வேண்டும்? மன்னன்