பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி.கே. சண்முகம் & 59

மீது பாடினால்தான் எனது புலமை மன்னனுக்குப் புரியுமோ?" என்று கூறிவிட்டார். சுவாமிகள் இறுதி வரையில் நரஸ்துதி பாடவேயில்லையென்பது குறிப்பிடத்தக்கது. தமிழை விற்கச் சம்மதியேன்

சுவாமிகள் அவ்வப்போது எழுதிய பக்தி ரசப் பாடல்களையெல்லாம் திரட்டி ஒரு சிறு நூலாக வெளியிடச் சில அச்சகத்தார் முயன்றனர். சுவாமி களிடம் அனுமதி கேட்டபோது, 'இலவசமாகக் கொடுப்பதானால் அச்சிட்டுக் கொள்ளுங்கள். தமிழை விலைக்கு விற்கச் சம்மதிக்க மாட்டேன்' என்று கூறி மறுத்துவிட்டார்.

முடிவுரை

திறமை வாய்ந்த ஒரு பெரும் புலவரிடம் இத்தகைய நற்பண்புகளும் குடிகொண்டிருந் தமையால் தமிழ்நாடக உலகம்தவத்திருசங்கரதாஸ் சுவாமிகளைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றி வணங்குகிறது.

சுவாமிகள்மறைந்தார். அவரது பாடல்கள்என்றும் மறையா; அழியா. சுவாமிகளின் திருப்பெயர் தமிழ் உலகம் உள்ளளவும் மங்காது நின்று ஒளி வீசுமாக

வணக்கம்!

©