பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6 ❖

தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்



நடித்தார். இவர் நடித்த 'மேனகா' என்ற சமுதாயப் படம் 1935-ன் சிறந்த படமாகப் பரிசுப் பெற்றது. 1953-ல் மனிதன்' என்ற படத்தில் இவரது நடிப்பிற்காக தமிழகத்தின் சிறந்த திரைப்பட நடிகர் என்பதற்குரிய பரிசினை இவர் பெற்றார்.

திரு. சண்முகம் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய வெளிநாடுகளுக்கும், டில்லி, பம்பாய், கல்கத்தா, நாகபுரி, பெங்களுர், திருவனந்தபுரம் முதலான பற்பல வெளி மாநில நகரங்களுக்கும் தம் குழுவினருடன் சென்று நாடகம் நடத்திப் புகழ் ஈட்டினார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மாத வெளியீடான நடிகன் குரல் ஏட்டின் பொறுப்பாசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.

சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம், இளங்கோ கலைக் கழகம் ஆகியவற்றின் தலைவராகவும், சென்னை நாட்டிய சங்கத்தின் துணைத் தலைவராகவும், பாரதியார் சங்கம், தமிழரசுக் கழகம் ஆகியவற்றின் பொதுச் செயலாளராகவும் இவர் விளங்கி வந்தார்.

மகாகவி பாரதியாரின் இலக்கியங்களை நாட்டின் பொது உடைமையாக்கியதில் இவருக்கும் முக்கிய பங்கு உண்டு.

1960-ல் தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கம் திரு. சண்முகத்திற்குச் 'சிறந்த தமிழ் நாடக நடிகர்' என்ற விருது வழங்கியது.

1961-ல் பண்டித மோதிலால் நேரு நூற்றாண்டு விழாவின் சார்பில் புதுடில்லியில் டி. கே .எஸ். சகோதரர்களின் நாடகங்கள் நடைபெற்றபோது, பாரதப் பிரதமர் பண்டித நேரு போன்ற பெரியோர்களால் இவர் பாராட்டப் பெற்றார்.

20. 8. 62-ல் டில்லி மத்திய சங்கீத நாடக அகாடமியின் சார்பில் தமிழ்நாட்டின் சிறந்த நாடக நடிகர் என்ற விருது திரு. சண்முகத்திற்கு வழங்கப்பட்டது.