பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்

89



கலைமுதலில் நாமநிலை யோது பொருளை
யுகமுடிவி லுறுதியாக லாத பொருளை
ஒருமையொடு நிறைவுகுறையாத பொருளை

பாட்டு

பல்லவி

உற்றறிந்தேன் யாவையும் நான் கற்றறிந்தேன்
வேதாசார முற்றறிந்தேன் - உண்மைநிலை
ஒதுவேன் நீரது காதுகொண்டுகேளும் (உற்ற)

அநுபல்லவி

ஒசையொடு உருவாகி முதல் முதல்
ஒதி எவர்களும் நாடு பொருளதை (உற்ற)

கவி

பிதா-

மறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு.

என்பது வேதாகமசார நீதிமொழி ஆதலால், அவ்வறிவும், அவ்வறிவுக்குக் காரணமானதும், அக்காரணம் தனக்கன்னியமில்லாததும், ஆகவே காரண காரிய மொழியா லிரண்டும் பொருளாலொன்றுமாக நின்றதும், இதனால் சிந்தை செல்லாத நிலை கொண்டு தூரமானதும் அன்பினாலே ஆராதிக்குங்கால், ஐக்கியப்பட்டு அணுகுவதாலும், அவ்வன்பே வடிவாகக் காணப்படுவதாலும், சமீபமானதும், நால்வகை யோனி, எழுவகைத் தோற்றம், எண்பத்து நான்கு லட்ச ஜீவ பேதங்களின் உள்ளும் புறம்பும் நிறைந்து சர்வ வியாபகமானதும், தேவ, கந்திருவ, சித்த, சாரண, உரக, பன்னகராதி கணத்தினருஞ் சேவை செய்ய அதிகாரஞ்