பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vi


எங்கள் எண்ணத்தை நிறைவேற்ற முனைவர். ம.ரா.போ. குருசாமி, முனைவர். தெ. ஞானசுந்தரம், டாக்டர், என். சிவராசன், திரு. கெளரிசங்கர் (அங்கிள்), யாழ்ப்பாணம் ச. மார்க்கண்டு ஆகியோர் உதவினார்கள். அவர்களுக்கு எம் நன்றிகள்.

மேலும் இந்நூலுக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் அணிந்துரை வேண்டி, 'நாடகக் காவலர்' ஆர்.எஸ். மனோகர் அவர்களை அணுகினோம். மிகுந்த மனநிறைவோடும் மிக விரைவாகவும் நூல் பிரதியை வாசித்து அணிந்துரையை அளித்தார்கள். அவரின் ஒத்துழைப்பிற்கு எங்கள் நன்றியைத் தெரிவிப்பதோடு, நீண்ட காலத்திற்கு நாடகச் சேவை செய்ய இறைவன் அருள்வான் என வாழ்த்தினையும் தெரிவிக்கின்றோம்.

தந்தையாரின் முப்பது நூல்களுக்குமேல் வெளியிட்டிருக்கின்ற கங்கை புத்தக நிலையத்தார் இதனையும் வெளியிடுகிறார்கள். நிறுவனர் பெரியவர் வானதி திருநாவுக்கரசு அவர்களுக்கும், திருநாவு. இராமநாதன் அவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகிறது. தந்தையாரின் ஆசீர்வாதம் அவர்களுக்கு என்றும் உண்டு.

அ.ச.ஞா. குடும்பத்தினர்.

11.11.2002
19, டாக்டர் நடேசன் சாலை,
அசோக்நகர், சென்னை - 83.