பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொகுப்புரை

யாழ்ப்பாணம். ச. மார்க்கண்டு.

அறிமுகம் தொடங்கிய நாட்களில்
ஆற்றல் வாய்ந்த இயற்றமிழ் வித்தகராகவே ஐயாவை* உணர்ந்திருந்தேன்.
நாட்செல்லச்செல்ல
முத்தமிழிலும் வல்ல மூதறிஞர் அவரென்பதை :விஸ்வரூதரிசனமாய்க் கண்டு வியப்புற்றேன்.
ஆனாலும்,
தமிழைப்போலவே.....
இசையையும் நாடகத்தையும்
ஒரளவு புறம்விட்டு,
இயற்றமிழ்ச் சித்தராகவே ஐயா உலாவந்தார்.
இன்தமிழ்ச் சொற்களைச்
சபைகளிற் பெருக்கும்போதில்-
நகைமுதல் தொடர்ந்த ஒன்பான் சுவையும்
சிறுசிறு அளவில் 'முகத்தினிற் காட்டி',
குரல்வழி ஏற்றமும் இறக்கமும் சேர்த்துக்-
'கதை சொல்லற் பாங்கி'ல் வெளிவரச் செய்வார்.
"பாத்திரம்” இரண்டு பேசுவதாயின்
'உரையாடல் உத்தியும் அங்கு அமையும்.

  • பேராசிரியர் அ.ச.ஞா.