பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

அ.ச. ஞானசம்பந்தன்



வந்து தங்கியுள்ளததை அறிந்த குகன், பரதன் வரவின் கருத்தினைத் தவறாகப் புரிந்து கொண்டு, அவன் மேல் சீற்றங் கொண்டு பேசுகிறான். இப்பகுதியில் வரும் பாடலும் அதனுடைய சந்தமுமே இங்குக் காணப் பெறுவதாகும்:

போனபடைத்தலை வீரர் தமக்கிரை போதா
இச் சேனைகிடக்கிடு தேவர்வரின்சிலை மாமேகம்
சோனைபடக் குடர்சூறைபடச் சுடர் வாளோடும்
தானைபடத் தனி யானைபடத் திரள் சாயேனோ!
-(கம்பர்:கங்கை காண் படலம்-20)

இவ்வாறு பலவிடங்களிலும் சந்தப் பாடல்களைப் புகுத்துவதன் மூலம், நாடகம் காண வந்தவர்கள் மனத்தில் ஒரு கிளுகிளுப்பை உண்டாக்குதல் சிறந்த நாடகாசிரியனின் கடமைகளுள் ஒன்றாகும். இது கருதியே போலும், சிலப்பதிகார அரங்கேற்று காதையில், நாடகாசிரியனின் இலக்கணங் கூறவந்த இடத்தில்,

இமிழ்கடல் வரைப்பில் தமிழகம்
அறியத் தமிழ்முழுது அறிந்த தன்மையன் ஆகி (அரங்-37-38)

இருத்தல் வேண்டும் என்று இளங்கோவடிகள் கூறுகிறார். ‘நாடகம் இயற்றும் ஆசிரியன் கடலால் சூழப் பெற்ற இத்தமிழ் நாட்டோர் அறிய மூன்று தமிழும் அறிந்தவனாக இருத்தல் வேண்டும்' என்பதே இந்த அடிகளின் பொருளாகும்.

நாடகத்தில் வரும் இசைப்பாடல்களை யாக்கின்றவன் முத்தமிழும் வல்லவனாக இருந்தால் ஒழிய அவனுடைய பாடல்கள் நிறைவுடையனவாக அமைய மாட்டா. இசை அறியாது இலக்கணம்