பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

அ.ச. ஞானசம்பந்தன்



சிந்தி விட்டது என்றால், பேசும் மொழியில் ஒருவன் &B &ls of LD FT 35 இருக்க வேண்டும் என்பதும் அவனை அறியாமல் அது சிந்தி விடுமேயானால் பால் சிந்தியதைப் போன்ற நட்டத்தை அது உண்டாக்கும் என்பதும் புலனாகின்றன.

யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு (குறள் : 127)

என்ற குறளை மனத்துட் கொண்ட சுவாமிகள், 'மொழியைச் சிந்தி' என்ற அழகான ஒரு சொல்லினால் இக்கருத்து முழுவதையும் கொணர்ந்து விட்டார் என்றால் அவருடைய புலமைக்கும் சொல் வன்மைக்கும் இதை விடச் சிறந்த எடுத்துக் காட்டு வேறு ஒன்றும் வேண்டுமா?

மேலும் சுவாமிகள் திருக்குறள் முதலிய அறநூல்களுள் தோய்ந்து எழுந்தவர் என்பதையும் அறிதல் வேண்டும். பல்வேறு இடங்களில் திருக்குறளை அப்படி அப்படியே, எடுத்தாண்டுள்ளார். குறளின் பின்னர்த் தோன்றிய நீதி நூல்களையும் விட்டார் இல்லை. 'சதி அனுசூயா' என்ற நாடகத்தில் நர்மதையின் கூற்றாக வரும் பகுதி நோக்கற்குரியது:

தவஞ்செய்வார் தங்கருமம் செய்வார்மற்றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு' என்பது
வேத மொழியன்றோ? தவத்தையல்லாது மற்ற
தான தரும விதி நிஷேத இல்லற வாழ்க்கை
யென்னும் உத்தம மார்க்கங்களெல்லாம்
முடிவில் பயனற்ற தொழிலாகவே போவதனால்
அற்ப சுகமாகிய சிற்றின்பத்தை வெறுத்துப்