பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

அ.ச. ஞானசம்பந்தன்



காந்தன்தளி என்ற ஊரில் அவர் பாடிய பாடல் வருமாறு:

திங்கள் தங்கு சடைகள் மேலோர்
திரைகள் வந்து புரள வீசும்
கங்கை யாளேல் வாய்தி றவ்வாள்
கணப திய்யேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவி யார்கொற் றட்டி யாளார்
உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
ஒண காந்தன் தளியு ளீரே!(திருமுறை 7:5:2)

இப்பாடலை மனத்துட் கொண்ட சுவாமிகள் மீனாட்சியம்மையின் மேல் வஞ்சப் புகழ்ச்சியால் பாடுகின்றார்.

மேற்குலத்து மாதாவாயோ சொல்லடி-மீனாட்சி
வித்தாரம் நீயுரைத்தாலும் தக்காது நல்லதல்லடி-(மே)

அனுபல்லவி

காற்பதுமம் தேடிவந்து காசினியோர் பூசித்தாலும்
கண்டுபோற்றி இந்திராதி கண்டர் புகழ்வாசித்தாலும்-(மே)

சரணம்

ஆட்டிடையன் அண்ணன் நாதன்
கோட்டி கொண்டிட்ட வலையன்
ஆசைமகனுங் குறவனல்லவோ-உன்றன்
அந்தரங்கமான நிந்தைபழி நானறிவேன்
ஊமையன் பிள்ளைத்தமிழ் உன்மீது பாடி மேன்மையாய்
உயர்த்திப் புகழ்ந்ததும் உபசாரமே-நேரில்
உற்றிடுங் கர்மத்தால் ஜாதி
ஜென்மத்தால் ஜாதியில் லையென்