பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 101

பூர்வீகம், வடிவம், குணம், குறி ஆகியவற்றைப் பற்றிய நினைவாவது இருக்க வேண்டாமா?

அந்த ராகங்களில் பாடப்படும் பாடல்கள் அனைத்தும் தெலுங்கு அல்லது வடமொழியிலேயேதான் இருக்க வேண்டுமா?

பாடுகின்றவனுக்கும் பாட்டின் பொருள் தெரியாது; கேட்பவர்களுக்கும் புரியாது. இந்த நிலையை இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் அனுமதிப்பது?

தமிழகத்தில் வேறு எதற்குப் பஞ்சமானாலும் கவிஞர் களுக்குப் பஞ்சமில்லையே!

அந்தப் பஞ்சைகளை அழைத்துவைத்துப் பண்முறை களை வகுத்துக்கொடுத்து, வயிற்றுக்கும் சிறிது வகை செய்து கொடுத்தால், இந்தப் பஞ்சத்தை இந்த நூற்றாண்டிலேயே போக்கிவிட முடியுமே!

தமிழக அரசும், தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களும், தமிழிசைச் சங்கமும் முயன்றால் முடியும்; முயல வேண்டு மென்றும் விரும்புகிறேன்.

தமிழ் நாடகங்களின் இடைக்கால நிலை

இதுகாறும் தமிழ் நாடகத்தின் கூறுகளாகவுள்ள நாட்டியக்கலை பற்றியும், இசைக்கலை பற்றியும், கதாகால க்ஷேபம், கிராமியக்கதை சொல்லும் முறை ஆகியவை பற்றியும் கூறினேன்.

நாடகத்தின் தோற்றுவாய் பற்றியும் ஓரளவு தொடக் கத்திலேயே கூறினேன்; இனி, சிலப்பதிகாரத்துக்குப் பின்னே தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை யுள்ள காலங்களில், நாடகக்கலையின் நிலைகுறித்துச் சிறிது கூறலாம் என்று நினைக்கிறேன்.