பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கவிஞர் கு. சா. கி.

துண் நிழல் புறப்பட, மாண்விளக்கு எடுத்து-ஆங்கு ஒருமுக எழினியும், பொருமுக எழினியும், கரந்து வரல் எழினியும், புரிந்துடன் வகுத்த அங்கு ஓவிய விதானத்து உரைபெறு கித்திலத்து மாலைத் தாமம் வளைவுடன் நாற்றி விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்து

மாதவியின் அரங்கேற்றம் நடைபெற்ற அரங்கமேடையின் அமைப்புமுறை, நாகரீக முதிர்ச்சியும், மின்சார சாதன ஒலி, ஒளி அமைப்பு முறை வளர்ச்சியும், ஓவியக் கலைத்திறன் மிகுந்த திரைச்சீலைகள் மிகுதியும் மலிந்துள்ள இந்த இருப தாம் நூற்றாண்டினராகிய நம்மையெல்லாம், வியப்படையச் செய்கின்றது.

நாடக இலக்கண நூல் மரபின்படி ஒரு மனிதனின் இருபத்து நான்கு விரல், அதாவது ஆறு பிடி கொண்ட ஒரு அளவு கோலைக் கொண்டு, ஒரு கோல் உயரமுள்ள மேடை யும், ஏழு கோல் அகலமும், எட்டுக்கோல் நீளமும் நான்கு கோல் உயரமும் கொண்ட அரங்க மேடை அமைப்பு முறை யும், மேடையின் இருபுறத்தும் அழகிய இரண்டு வாயில்களும் மேல் விதானத்தில் அழகிய பதுமைகள் எழுதி வைத்து அலங்கரித்தும், அரங்கின் தூண்முதல் பிற நிழல்கள் விழா வண்ணம் மாண் விளக்குகள் பொருத்தியும், ஒரு பக்கத்தி லிருந்து மறுபக்கம் வரை சென்று மறைக்கும் ஒரு முக எழினி யும், இருபக்கத்திலுமிருந்து அரங்கின் மத்திய பகுதி வரை வந்து இணையும் பொருமுக எழினியும், மேலிருந்து இழிந்து வரும் கரந்துவரல் எழினியும் பொலிந்து விளங்கிய, அரங்க மேடை அலங்கார அமைப்பு முறை இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே தமிழகத்தில் புழக்கத்தில் இருந்தது என்பது தமிழினம் பெருமிதம் கொள்ளத் தக்க செய்தியாம்.

இத்தகைய நாடக மேடை அமைப்புமுறை, பதினைந் தாம் நூற்றாண்டு வரையிலும்கூட ஆங்கில நாட்டு நாடக மேடைகள் காணாத புதுமையாகும்.