பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 105

மேற்கண்ட நாடக நாட்டியக் கலைகள் பற்றியும், நடிப்புத்திறன் குறித்தும், ஆசிரியர் சிறப்பை விளக்கியும், இசைக் கலையின் மேன்மைகளையும், இன்னியங்களின் சிறப்புக்களையும் விளக்கிக் கூறும், இலக்கண இலக்கிய வரலாற்றுச் சிறப்புமிகும் இயலிசை நாடகக் காப்பிய மென்று போற்றப் பெறும் சிலப்பதிகாரத்திற்குப்பின், ஏறத்தாழ பதினைந்து நூற்றாண்டுக்கு மேல், நாடகக் கலைக்கு இருண்ட காலமாகவே இருந்திருப்பதைக் காண வியப்பும் வேதனையுமாகவே இருக்கிறது.

நாடகக் கலையின் நலிவு

குறுந்தொகை, புறநானூறு, சிலப்பதிகாரம் ஆகிய பண்டைய இலக்கியங்கள் கூறும் சிறப்புக்கள் அனைத்திற்கும் நிலைக்களனாய் விளங்கிய நாடகக்கலை, கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு, களப்பிரர், பல்லவர் போன்ற வேற்றரசர்களின் ஆட்சியிலும், சமணம், பெளத்தம் போன்ற பிற மதங்களின் சூழ்ச்சியிலும், படிப்படியாகப் பொலிவும் வலிவும் இழந்து சூன்ய நிலைக்கு வந்தது.

ஆயினும், தேவார, திருவாசக ஆசிரியர்களும், ஆழ் வாராதிகளும், நாயன்மார்களும் இடையறாது நடத்திய போராட்டங்களின் காரணமாகவும், ஒன்பதாம் நூற்றாண் டுக்குப்பின் மீண்டும் தமிழகத்தில் தலையெடுத்த சோழ பாண்டியப் பேரரசுகளின் பெருமுயற்சியாலும், இசை நாடகம் போன்ற கவின் கலைகள் புத்துயிர் பெற்று வளரத் தொடங்கின.

அக்காலத்தில், பெரும்பாலும் புராண இதிகாச நாடகங் களே நடைபெற்றிருக்கின்றன. அவைகளும், முழுதும் பாடல்களாகவே நடைபெற்றன.

இராஜராஜனின் வெற்றியை விளக்கும் வரலாற்று நாடகம், ஆண்டுதோறும் தஞ்சைப் பெருவுடையார்

த.நா.-7