பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 107

சுவாமி விபுலானத்தரின் மதங்க சூளாமணியும்', பரிதி மாற் கலைஞரின் 'நாடகவியல்' என்னும் நூலும், மறைமலை யடிகளாரின் 'சாகுந்தல ஆராய்ச்சியும்’, பம்மல் சம்பந்தனா ரின் 'நாடகத்தமிழ்’ என்னும் நூலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் எழுதப்பெற்றனவே தவிர அதற்குமுன் நாடக இலக்கிய நூலோ, இலக்கண நூலோ இருந்ததாகத் தெரியவில்லை. ஆயினும், இவற்றிற்கிடைப்பட்ட காலங் களில், அவ்வப்போது இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச நாடகங்களும், கந்தர்நாடகம், காத்தவராயன் நாடகம், புரூரவச் சக்கரவர்த்தி நாடகம், மற்றும் இராமாயண-பாரதத்தில் உள்ள கிளைக்கதைகள், அல்லது அவற்றின் சிற்சில பகுதிகள் நாடகமாக நடிக்கப்பெற்றன வென்று அறிகின்றோம்.

இவைதவிர, நொண்டி நாடகங்கள் குறவஞ்சி நாடகங்கள், பள்ளு நாடகங்கள், மந்தை நாடகங்கள் என்பனபோன்ற நாடகங்கள், பாமர ரஞ்சகமான பாடல் களும் சம்பவங்களும் கொண்டவைகளாக நடைபெற்று வந்தன. கும்பேசரர் குறவஞ்சி, அழகர் குறவஞ்சி, ஞானக் குறவஞ்சி, கொடும்பாளுர்க் குறவஞ்சி, சரபேந்திரப் பூபாலக் குறவஞ்சி, மீனாட்சியம்மை குறவஞ்சி போன்ற பல குறவஞ்சி நாடகங்கள் இருந்திருக்கின்றன.

இந்நாடகம், வீதி உலாவரும் ஒரு தெய்வத்தின் மீதோ அல்லது அரசனின் மீதோ காதல் கொண்ட ஒரு தலைவி, விரகதாபத்தால் வேதனையுற்றுத் திங்களையும், தென்றலை யும் வெறுத்துப் பாடுவதாகவும், தலைவியின் நிலைக்கு இரங் கிய அவள் தோழி ஒரு குறத்தியை அழைத்துக் குறி கேட்ப தாகவும், தலைவியின்காதல் நிச்சயம் நிறைவேறும் என்று குறத்தி குறி சொல்லுவதாகவும், தலைவி மகிழ்தளித்த பொன்னும் பொருளும் அணிமணிகளும் பெற்றுவரும் குறத்தி யைக் கண்டு, குறவன் சந்தேகம் கொண்டு நிந்தித்துப்பின்