பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

சிலம்புச் செல்வர் டாக்டர் ம. பொ. சிவஞானம்

கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கலையுலகத் திற்கு நன்கு அறிமுகமானவர் என்னுடைய நெடுநாளைய நண்பர். எனது தலைமையில் இயங்கி வரும் தமிழரசுக் கழகத்தின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராக விளங்கு பவர். புதிய தமிழகம் படைக்க நான் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் எல்லாம் என்னுடன் தோளோடு தோள் சேர்த்துத் தொண்டாற்றியவர்.

இளமையில் நாடகத் துறையில் சேர்ந்து நடிப்புக் கலை யில் பயிற்சியும் அனுபவமும் பெற்ற இவர், நாடக நூலாசிரி யருங் கூட நாடகத் தமிழின் ஒரு கூறாக உள்ள இசைத் தமிழிலும் பயிற்சி பெற்றவர். பாடல்கள் புனையவும், அதற்கு இசையமைக்கவும் வல்லவர்.

முத்தமிழ்த் துறையிலே தமக்குள்ள அறிவையும், அனுபவத்தையும் கொண்டு, 'நாடகத்தமிழ்' என்னும் பொருள் பற்றி, இந்தியப் பல்கலைக் கழகங்களிலே தலை சிறந்ததான சென்னைப் பல்கலைக் கழகத்தில் தாம்நிகழ்த்திய ஆராய்ச்சியுரையை இந்த நூல் வடிவில் தந்துள்ளார்.

நம் தாய் மொழியை 'முத்தமிழ்' என்கிறோம். அது. ஏன்?-என்பதை இந்நூலில் ஆசிரியர் விளக்குகிறார். இசைத் தமிழுக்கும் நாடகத் தமிழுக்கும் . ஸ்ள தொடர்பை