பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 கவிஞர் கு. சா. கி

இந்நொண்டி நாடகங்கள் வழங்கப்பெறும். இதே காலத்தைத் தொடர்ந்து பல்வேறு புராண நாடகங்களும் தெருக்கூத்தாக நடிக்கப் பெற்றன.

பழங்காலத்தைப் போல் மன்னர்கள். பெருநிலக் கிழார் கள் ஆகியோரின் ஆதரவோடு நாடகக்கலை வளரவும், நாடகக் கலைஞர்கள் வாழவும் வாய்ப்பற்ற நிலையிலும்கூட, கலையின்பால் தமக்குள்ள ஆர்வம் காரணமாகவும், வயிற்றுப் பிழைப்பிற்காகவும், அக்கால நாடகக்கலைஞர்கள் ஆங்காங்கு எப்படிஎப்படியோ சிற்றுார்களிலும் கோயில்களிலும் கிராமக் களத்து மேட்டிலும் அவ்வப்போது சிற்சில புராண நாடகங் களைத் தெருக்கூத்தாக நடித்துக் கொண்டுதான் வந்தனர்.

ஏறத்தாழ பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவரை, தமிழகத்தில் நாடகக்கலையின் நிலை இதுதான் என்றே கூறவேண்டும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையிலும் இறுதி யிலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பல பிற மாநிலத் தைச் சேர்ந்த நாடகக் குழுக்கள் அவ்வப்போது வந்து தங் களின் நாடகங்களை வெற்றிகரமாக நடத்திப் புகழும் பொரு ளும் ஈட்டினர். பாலிவாலாக் கம்பெனிகளும், மராத்தி நாடகக் குழுவினர்களும் பார்ஸி நாடகக் குழுவினர்களும், ஆந்திர நாடகக் குழுவினர்களும் குறிப்பிடத்தக்கவர்களாவர்.மராத்தி, ஹந்தி, பார்ஸி, தெலுங்கு போன்ற புரியாத மொழிகளில் மேற்கண்ட நாடகங்கள் நடந்தனவென்றாலும், இந்த நாடகங்களில் காணப்பட்ட காட்சி அமைப்பு ஒப்பனைச் சிறப்பு, கதை அமைப்பு, நடிகர்களின் திறம், கட்டுக்கோப்பு, கவர்ச்சி ஆகிய பல்வேறு நல்ல அம்சங்கள் தமிழ் மக்களைப் பெரிதும் கவர்ந்தன.

எனவே, அத்தகைய உயர்ந்த கட்டுக்கோப்புடன் கூடிய

வகையில் தமிழிலும் நாடகங்களை நடத்தவேண்டுமென்ற ஆர்வம் தமிழர்கள் மத்தியிலும் உண்டாயிற்று.