பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 111

பல்வேறு நாடகக் குழுக்கள் ஆங்காங்குத் தோன்றின. ஆயினும், அவற்றில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க உயர்ந்த நாடகக்குழுவாகத் தஞ்சையைச் சேர்ந்த கோவிந்தசாமிராவ் அவர்களின் "மனமோகன நாடகக் கம்பெனி' என்ற அமைப்பே தலை சிறந்து விளங்கியது என்று, பம்மல் சம்பந்த னார் முதல், பழங்கால வரலாறு தெரிந்தோர் அனைவரும் பாராட்டியுள்ளனர்.

ஆந்திர வழக்கறிஞர் திரு கிருஷ்ணமாச்சார் என்பவரின் சரசவினோதினி சபா நாடகங்களும், தஞ்சை கோவிந்தசாமி ராவ் அவர்களின் நாடகங்களும்தான், திரு. பம்மல் சம்பந்த முதலியார் அவர்களுக்கு நாடகக் கலையின்பால் ஈடுபாட்டை உண்டாக்கி, சுகுண விலாஸ் சபாவைத் தோற்றுவித்து, தொண்ணுற்றுக்கும் மேலான நாடகங்களை எழுதியும், தயாரித்தும், நடித்தும், படித்தவர்கள் மத்தியில் நாடகக் கலைக்கு ஒரு சிறப்பான இடத்தைத் தேடித்தர உதவின. சென்னையில் பம்மல் சம்பந்த முதலியார் தோற்றுவித்த சுகுணவிலாஸ் சபாவின் வளர்ச்சியும் புகழும் பரவியதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில், அமெச்சூர் நாடகக் குழுக்கள் பல தோன்றின.

சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்த அறிஞர்கள் பலர் நடிகர்களாகவும், நாடகாசிரியர்களாகவும் பங்கேற்று நாடகக் கலைக்குத் தொண்டாற்ற முன் வந்தனர். இவர் களில் குறிப்பிடத்தக்கவர்கள் வ. வெ. சு ஐயர், சுப்ரமண்ய சிவா, பாரதத்தின் நிதியமைச்சராயிருந்த சர். ஆர். கே. சண் முகம் செட்டியார், தேச பக்தர் எஸ். சத்யமூர்த்தி ஐயர், எப். ஜி. நடேசய்யர், சர். சி. பி. ராமசாமி அய்யர், வி. சி. கோபாலரத்தினம், எம். கந்தசாமி முதலியார், டாக்டர் வி. ராமமூர்த்தி போன்ற எண்ணற்ற பெருமக்கள் பங்கேற்று நாடகக் கலைக்குப் பெருமை சேர்த்தனர்.

பம்மல் சம்பந்தனாரின் நாடகங்களில், மனோகரா, ரத்னாவளி, கள்வர் தலைவன், இரண்டு நண்பர்கள்,