பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 கவிஞர் கு. சா. கி.

காளிதாசரின் மாளவிகாக்கினி மித்ரம் போன்ற எத்தனையோ நாடகங்கள் மிகப் பிரசித்திப் பெற்றுப் பல நூறு முறை மேடை களில் நடித்துப் புகழ்பெற்றவையாகும்.

இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களிலும் , இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், மடைதிறந்த வெள்ளம் கரைபுரண்டு,காடுமேடுகளெல்லாம்.ஒடுவது போல், இசை, நாட்டியம், நாடகம் ஆகிய கவின் கலைகள் அனைத் தும் அமோக வளர்ச்சி பெற்று, கிராமங்கள், சிற்றுார்கள், பேரூர்கள், பெருநகரங்கள் ஆகிய எங்கெங்கும் கட்டுப் பாடின்றிக் கலைக் குழுக்கள் பெருகின.

குறிக்கோளற்ற இக்குழுக்களில் பங்குகொண்ட இக் கலைஞர்களைத் திட்டமிட்டு ஒரு வரம்புக்குட்பட்டுக் கட்டுப் பாட்டுடன் இயக்கிச் செல்லும் முறையில் வலுவான அமைப் புக்களோ, தலைமையோ இல்லாத காரணத்தால், மேற்படி கலைஞர்கள் தங்கள் தங்களின் ஆற்றலுக்குத் தக்கபடி பாடி யும் நடித்தும் புகழும் பொருளும் குவித்தனர்.

இவர்களிலும் இருவேறு தரத்தினர் இருந்தனர். ஒரு சாரார், படிப்பறிவற்ற பாமர மக்கள் வாழும் பட்டி தொட்டி களில் தெருக்கூத்தாடும் கூத்தாடிகளாகவும்,

வேறொரு சாரார், படித்தவர்கள் நிறைந்துள்ள நகரப் பகுதிகளில்-சற்று உயர்தரமான சங்கீதத் திறமையுடன், வட மொழியிலும் தெலுங்கு மொழியிலும் சுலோகங்கள், ாாடல்களைப்பாடி மக்களிடையே ஒரு பிரமிப்பை உண்டாக்கி தங்களின் மேதா விலாசத்தைக் காட்டுவோராயும் இருந்தனர்.

இதற்கெல்லாம் காரணம் தாய்மொழிக்கலை, கலாச் ாரம், இலக்கியம் ஆகிய துறைகளின் வளர்ச்சியைத்