பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 113

தடுத்துக்கட்டுப்படுத்தி மேலாதிக்கம் செலுத்திவந்த மராத்தி, தெலுங்கு, வடமொழி ஆகிய பிற இனத்தவர்களின் ஆதிக்க அரசுகள் அகன்று, எங்கெங்கும் ஆங்கில ஆட்சி ஏகபோக மாய் ஆதிக்கம் செலுத்தும்நிலை, ஏற்பட்டதன் விளைவுதான்.

தங்களின் ஆதிக்கத்தை எதிர்க்கும் உணர்வு தலை தூக்காமல், மக்கள், கலை, இலக்கியத் துறையில் மோகமும் மயக்கமும் கொள்வதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இருந்தது ஆங்கில ஆட்சி.

எனவே, களப்பிரர் காலம் தொட்டு, திப்பு சுல்தான் காலம்வரை மாறி மாறி ஆதிக்கம் செலுத்திவந்த வேற் றினத்தவர்கள், எல்லாத் துறைகளிலும் தமிழன் தனித் தன்மையை அழித்து, ஒரு கலப்படக் கலாச்சாரத்தை உருவாக்க எடுத்துக்கொண்ட முயற்சி, நாடகத் துறையிலும் பிரதிபலித்தது. -

இராமாயணமும் அதன் தொடர்புள்ள கிளைக் கதை களும், மகாபாரதமும் அதன் கிளைக் கதைகளும், மற்றும் அநேக புராண இதிகாசக் கதைகளும் நடிக்கப் பெற்றன.

வடமொழியில் பாஸன் எழுதிய பாலசரிதா, சாருக தத்தா, காளிதாசரின் சாகுந்தலம், விக்ரம ஊர்வசி, மாளவி காக்னி மித்ரா, ஹர்ஷவர்த்தனாவின் ரத்னாவளி, பிரியதரி சிகா, நாகநந்தா, பவபூதியின் மகாவீரசரிதா, உத்தரராம சரிதா, மாலதி மாதவம்; பட்டநாராயணரின் வேணி சம்ஹாரம்; விசாகதத்தாவின் முத்ராராட்சம் போன்ற வட மொழி நாடகங்களும்; கிருஷ்ண மிஸ்ராவின் பிரபோதச் சந்திரோதயாவும்; ரவீந்திரநாத்தாகூர் அவர்களின் சித்ரா, ராஜா, வசந்தசைக்கில் போன்ற நாடகங்களும்; மொழி பெயர்ப்பு என்ற பெயரில் மிகுதியும் வட மொழிச் சுலோகங் களே நிறைந்ததாகவும், இடை இடையே ஒன்றிரண்டு தமிழ் உரை நடை விளக்கங்களைக் கொண்டதாகவும் நடைபெற்று வந்தன. -