பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 117

அனுபவ பூர்வமான பயிற்சியளிக்கும் திறம் தேவைப்பட்டது. இவரது ஆற்றல் பற்றிப் பிறகு விரிவாகக் கூறுகின்றேன்.

நான் முன்னே கூறிய 19-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரை கட்டுப்பாடும் தரமும் அற்ற முறையில்தான் நாடக மேடை இருந்தது.

ஆயினும், அக்காலத்தில் தனிப்பட்ட முறையில் ஆற்றல் மிக்க சங்கீதத் திறமும் அற்புதமான சாரீரவளமும், இணை யற்ற நடிப்பாற்றலும், எல்லையற்ற தத்துவஞானமும் எழுச்சிமிக்க உரையாடல் திறமும் கொண்ட நூற்றுக் கணக் கான நடிகர்களும் நடிகைகளும் பெரும்புகழ் பெற்று விளங்கி

6TT。

அவரவர்களுக்குரிய சிறந்த அம்சங்களையே அவரவர் பெயர்களுடன் பட்டங்களாக இணைத்து குறிப்பிடுவதையே அக்கால நாடக ரசிகர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அத்தகைய பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர்களின் கலையைப்பற்றி என் நினைவுக்கு எட்டியவரை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

மனமோகன அரங்கசாமி நாயுடு, அல்லி பரமேஸ்வர ஐயர், நவாப் கோவிந்தசாமி நாயுடு, சந்திரமதி சாமினாத ஆச்சாரி, ஆஞ்சநேய கோவிந்தசாமி நாயுடு, இராவண கோவிந்தசாமி நாயுடு. ராஜா எம். ஆர். கோவிந்தசாமி பிள்ளை, கிறுக்கு கோவிந்தசாமி பிள்ளை, வண்ணச் சந்தம் சாமினாத முதலியார், ஓரடி முத்துவேல் பிள்ளை, பைரவி சுந்தரம் பிள்ளை, சந்தச்சரப சங்கீதயுவராஜா, கல்லிடைக் குறிச்சி மொய்தீன் சாயபு, இந்தியன் சார்லி சாப்லின் சி.என். சாமண்ணா ஐயர், கள்ளபார்ட் நடராஜ ஆசாரி, கள்ளபார்ட் தங்கவேலுப் பிள்ளை, விகடப்பக்கிரி தர்க்க வியாகர்ண பண்டித குப்புசாமி சாஸ்திரிகள், காளி என். ரெத்தினம், ராஜ பார்ட் ராமசாமி ஐயர், வெங்கலத்தொண்டை சாமிநாத முதலியார், நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, இங்கிலீஷ்