பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கவிஞர் கு. சா. கி.

திருப்புகழ் ஜீவரத்தினம்மாள், ஒளவை.சண்முகம், சோழன் பகவதி, எலும்பில்லா மானிடன் காமிக் மாஸ்டர் கே. எஸ். சாமினாதன் இப்படி இன்னும் எத்தனையோ கலைஞர்களைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இக்கலைஞர்களில் பலர் பெரும்புகழும் செல்வாக்கும் வருவாயும் பெற்றிருந்தார்களாகையால், ஒவ்வொருவரும் தங்களையே முக்கியஸ்தர்களாகக் கொண்டு, தனித்தனியே நாடகக் குழுக்கள் அமைத்துத் தமிழ்நாடு முழுவதும் மட்டு மின்றி இலங்கை, யாழ்ப்பாணம், பர்மா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற கீழை நாடுகளிலும், ஆந்திரம், கர்நாட கம், கேரளம் போன்ற பிற மாநிலங்களிலும் தங்கள் நாடகக் குழுவுடன் சென்று பெரும் பொருளிட்டினர்.

செல்வமும் செல்வாக்கும் அளவுக்கதிகமாகப் பெருகிய தன் காரணமாக, இக்கலைஞர்களில் பெரும்பாலோர் தீய பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு, சமுதாயத்தின் நல்லோர் களால் வெறுத்தும் இழித்தும் ஒதுக்கப்பட்டனர். 'கொழுக் கட்டைக்கு தலையுமில்லை! கூத்தாடிக்கு முறையுமில்லை! ஒரு தொழிலும் தெரியாதவன் கூத்தாடியானான்; ஊருக் கென்று ஒரு தேவடியாள் யாருக்கு என்று ஆடுவாள், ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்'

ஆரியக் கூத்தாடிக்குக் காரியத்தில் கண்."

கூத்தாடிகளைப்பற்றிய இத்தகைய இழிமொழிகளெல் லாம் பழமொழிகளாக வழங்கப்பெற்றன. நல்லவர்கள் மத்தி யில் குடியிருக்க நாடகக்காரர்களுக்கு வீடுகூட வாடகைக்குக் கிடைக்காது. குடி, கூத்தி, நம்பிக்கைத் துரோகம், நாணய மின்மை, நன்றி கெட்ட தன்மை, இத்தகைய தீய குணங் களால் நாடகக் கலைஞர்கள் எத்தனை பொன்னும் பொரு ளும் சேர்த்தாலும், இறுதிக்காலத்தில் வறுமையிலும் நோயி லும் வதைபட்டு, அனாதைகளாய் வாழ்வை முடித்துக் கொள்ளும் அவல நிலையையே காண முடிந்தது.