பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 119

கலைஞர்களின் வாழ்க்கையின் நியதியாய் நிலைத்து விட்ட இத்தகைய இழிவையும் பழியையும் துடைக்கதூய்மைப்படுத்த-ஒழுக்கமுடையவர்களாய் உயர்த்த-களங் கத்தைப் போக்க

பம்மல் சம்பந்த முதலியார், து. தா. சங்கரதாஸ் சுவாமி கள், ஜெகந்நாத ஐயர், மதுரை சச்சிதானந்தம் பிள்ளை , சி. கன்னையா, கே. சீனிவாசப்பிள்ளை, சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர், ஏகை சிவஷண்முகம் பிள்ளை, மயிலை எம். கந்தசாமி முதலியார், உடுமலை முத்துசாமிக் கவிராயர், குடந்தை வீராசாமி வாத்தியார், சந்தான கிருஷ்ணநாயுடு, நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, டி. கே. எஸ். சகோதரர்கள், எம். கே. ராதா, எம். ஜி. நடராஜ பிள்ளை, காமடியன் கே. சாரங்கபாணி, பி. எஸ். வேலு நாயர் கே. எஸ். அனந்த நாராயணய்யர் போன்ற நடிகப் பெருமக்களும், நாடகாசிரியப் பேரறிஞர்களும், நாடக நிறுவனத் தலைவர்களும், தங்கள் வாழ்நாளெல்லாம் பாடு பட்டு, ஒரளவு வெற்றியும் கண்டனர்.

அப் பெருமக்களின் இடையறாத உழைப்பின் காரண மாகக் கூத்தாடிகள் என்ற இழிபெயர் நீங்கிக் கலைஞர்கள் என்ற அந்தஸ்தைப்பெற முடிந்தது. கலைஞர்கள் அரசியலில் பங்கு பெறவும், அமைச்சர் பதவிகளில் அமரவும்கூடத் தகுதி உள்ளவர்கள் என்ற பெருமையைத் தேடித்தந்த அப்பெரி யோர்களின் சேவையை மறுப்பதோ, மறப்பதோ நன்றியுள்ள செயலாகாது.

கிராமிய தெருக்கூத்துக் கலைஞர்கள்

நகர்ப்புறத்து நாகரீக மேடைக் கலைஞர்களைப்பற்றி முன்னே கூறினேன். இனிக் கிராமப்புறங்களில், கோயில் திடல்களிலும், களத்து மேடுகளிலும், தெருக்களிலும் மேடைக்கு மட்டும் கீத்துக்கொட்டகை அமைத்துத் திறந்த