பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 கவிஞர் கு. சா. கி.

அச்சியந்திர வசதிகள் குறைவினால் துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் வாய்ப்பு இல்லாத நிலையில், இவரது விளம்பர முறை வியக்கத்தக்கதாகும்.

இவரது நாடகக் குழுவில், கிருஷ்ணையர் என்ற மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர், நாடகம் நடைபெறும் சிற்று ரைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கெல்லாம் சென்று-கோமாளி வேடத்திற்குரிய ஒப்பனையோடு, தாரை தப்பட்டை எக்காளம் முதலியவற்றை முழக்கிப் பொது மக்களைக் கூட்டி வைத்துக் கோமாளிக் கொனஷ்டைகள் செய்தும், நகைச் சுவையாகப் பேசியும் மகிழ்வித்துக் கடைசியில் தண்டோ ராவை முழக்கி,

" இதனால் சகலமான கனதனவான் களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், பெத்து நாய்க்கன் பாளையத்தில் அமைந்திருக்கும் சிங்காரக் கொட்டகையில் பூரீமான் பி. எஸ். சுப்பராவ் அவர்களின் நாடகக் கம்பெனி யாரால், கற்புக்கரசி யென்னும் சதாரம் சரித்திரம் மிகவும் விமரிசையாக நடைபெறும். கள்ளபார்ட் கனகராஜய்யரின் டப்பாடோமரி ஆட்டமும் பாட்டும் பார்க்கவும் கேட்கவும் பரமானந்தமாயிருக்கும். மகாஜனங்கள் அனைவரும் குடும்ப சமேதராய் வந்து கண்டு களித்து ஆதரிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.' -

என்று கூறி, துடும்-துடும்-துடும் என்று தண்டோராவை முழக்கியபடி-கால்களில் கஜ்ஜை கலீர் கலீரென ஒலிக்கத் தாளத்தோடு ஆடிக்கொண்டு,

சிட்டாஞ் சிட்டாங்குருவி சினுக்குத்தான்-அந்த சின்ன்க்குட்டி அழகில் மோகம் எனக்குத்தான்' என்று பாடிக்கொண்டே, அடுத்த கிராமத்தை நோக்கிப் புறப்பட்டுவிடுவார். இதனால் அவருக்குத் தண்டோரா கிருஷ்ணய்யர்' என்னும் பெயரே நிலைத்துவிட்டது.

இம் முறையை, இன்றும் சர்க்கஸ் கம்பெனிக்காரர்கள் கையாளுவதை காணுகின்றோம்.