பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கவிஞர் கு. சா. கி.

அக்காலத்தில் நாடகம் நடந்த முறை

நாடகத் தொடக்கத்திற்குமுன், பின்னணி இசை நடிகர் கள் அனைவரும் சேர்ந்து, இறை வணக்கப் பாடல் பாடி முடிந்தவுடன், முன் திரை தூக்கப்படும்.

உடன் சூஸ்திரதாரர் வருவார். அவரின் ஒப்பனை, பத் தாறு வேஷ்டியை பஞ்சகச்சமாகக் கட்டி உடலெல்லாம் சந்தனப் பூச்சும், நெற்றியில் சந்தனப் பட்டையும். குங்குமப் பொட்டும், மார்பின் குறுக்கே சரிகைப்பட்டு உத்தரீயமும், முப்புரி நூலும் தரித்து, குவிந்த கையுடன் அரங்கத்தில் தோன்றி நின்று, கீழ்க்கண்ட ஸ்லோகத்தைப் பாடுவார்:

ஸ்லோகம்

சபா கல்பதரம், வந்தே

வேத சாகோய ஜீவிதம்,

சாஸ்த்ர புஷ்யம் சமாயுக்தம்,

வித்வத் ப்ரம்ம சோபிதம்

இதன் பொருள்:

கற்பக விருகூடித்திற்குச் சமானமான சபைக்கு வணக்கம். வேதங்களே கிளையாகவும் சாஸ்திரங்களே புஷ்பங்களாக வும் கொண்டு ஜீவிக்கும் கற்பகத்தரு வண்டுகளால் சோபித மடைவதைப் போல், இங்கு அநேக வித்வான்கள் நிறைந் திருப்பதால், இந்தச் சபை சோபிதமடைகின்றது.

குஸ்திரதாரரின் தொடர்வசனம்:

'இன்று நடைபெறப் போகும் கற்புக்கரசி, சத்யவான் சாவித்ரி சரித்திரத்திற்கு நவரலங்கள் தேவை. அஷ்ட்டரச பாத்திரங்களும் சேமித்திருக்கிறோம். இதற்கு ஹாஸ்யரசம் தேவை. ஆகையால் ஹாஸ்ய பூமான் வருகையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்' என்று சொல்லி முடித்தவுடன், கோமாளியின் வருகை